elon musk twitter: ட்விட்டரில் 300 கோடி டாலருக்கு பங்கு வாங்கிய எலான் மஸ்க்: எடிட் பட்டன் வேண்டுமா எனக் கேள்வி
elon musk twitter: டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் சத்திமில்லாமல் ட்வி்ட்டரில் 9.2% பங்குகளை அதாவது ரூ.300 கோடி டாலருக்கு பங்குகளை வாங்கியுள்ளார்.
டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் சத்திமில்லாமல் ட்வி்ட்டரில் 9.2% பங்குகளை அதாவது ரூ.300 கோடி டாலருக்கு பங்குகளை வாங்கியுள்ளார்.
இதன் மூலம் ட்விட்டர் நிறுவனத்தில் மிகப்பெரிய பங்குதாரராக மாறிய எலான மஸ்க், ட்விட்டரில் எட்டி பட்டன் தேவையா என்ற கேள்வியெழுப்பி சர்வே செய்துள்ளார் எலான மஸ்க்
8 கோடி ஃபாலோயர்ஸ்
கடந்த 2009ம் ஆண்டுலிரு்து ட்விட்டரில் உறுப்பினராக இருந்து வரும் எலான் மஸ்கிற்கு ஃபாலோவர்ஸ் மட்டும் 8 கோடி பேர் உள்ளனர். தனது ஸ்பேக்ஸ்எக்ஸ், டெஸ்லா ஆகிய நிறுவனங்களின் முக்கிய அறிவிப்புகள் அனைத்தையும் ட்விட்டரில்தான் எலான் மஸ்க் வெளியிட்டு வருகிறார்.
உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மக்ஸ், ட்விட்டரில் உறுப்பினராக இருந்தாலும் ட்விட்டரில் கொள்கைகள், பேச்சுரிமை குறித்த நடவடிக்கைகளை தொடர்ந்து விமர்சித்து வந்தார்.
விமர்சனம்
இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்தை விமர்சித்துக்கொண்ட அதில் பங்குகளையும் எலான் மஸ்க் வாங்கியுள்ளார். இதுதொடர்பாக அமெரிக்கப் பங்குச்சந்தையில் பைலிங்கின்போத, எலான் மக்ஸ் ட்விட்டரில் 9.2சதவீதம் பங்குகளை வாங்கியது குறிப்பிடப்பட்டது.ட்விட்டருக்குப் போட்டியாக புதிய சமூக வலைதளத்தை உருவாக்கப்போவதாகத் தெரிவித்துவரும் எலான் மஸ்க், ட்விட்டரில் கேள்வி ஒன்றை எழுப்பி சர்வே செய்து வருகிறார்.
சர்வே
இதன்படி, ட்விட்டர் நிறுவனம் பயனாளிகளுக்கு பேச்சுரிமை வழங்குவதை உறுதி செய்கிறதா. ட்விட்டரில் எடிட் பட்டன் வேண்டுமா என்று எலான் மஸ்க் கேள்வி எழுப்பியுள்ளார். எடிட் பட்டன் வைப்பது குறித்து ட்விட்டர் நிறுவனம் நீண்டகாலமாக ஆலோசனையும் நடத்தி வருகிறது.
எலான் மஸ்க் எழுப்பிய கேள்விக்கு 2 மணிநேரத்தில் 11 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். இதில் 75 சதவீதம் பேர் ட்விட்டரில் எடிட் பட்டன் வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
ஆனால் ட்விட்டர் நிர்வாகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் கூறுகையில் “ பயனாளிகள் மிகுந்த கவனத்துடன் எலான் மஸ்க் கேட்ட கேள்விக்கு வாக்களியுங்கள்” எனத் தெரிவித்திருந்தார்சமீபத்தில் எலான் மக்ஸ் ட்விட்டர் தளத்தில் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். அதில் “ ட்விட்டர் நிறுவனம் பேச்சுரிமையை நிலைநாட்டுகிறதா என்ற கேள்விக்கு 70 சதவீதம் பேர் இல்லை எனத் தெரிவித்திருந்தனர்.
இது மட்டுமல்லாமல் கடந்தஆண்டு டிசம்பர் மாதம் ட்விட்டர் சிஇஓ அகர்வாலை சோவியத் யூனியன் சர்வாதிகாரி ஜோஸப் ஸ்டாலினுடன் ஒப்பிட்டு மீமகளை எலான் மஸ்க் வெளிட்டிருந்தார்.
பங்குகள்
ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின்அறிக்கையின்படி எலான் மஸ்கின் நிகர சொத்து 30ஆயிரம் கோடி டாலராகும். இப்போது ட்விட்டரில் 9.2 சதவீத பங்குகளை மஸ்க் வாங்கியுள்ளார். அதாவு, 7.35 கோடி பங்குகளை மஸ்ஸ் கைவசம் வைத்துள்ளார். ட்விட்டரில் வாங்கப்பட்ட 9.2 சதவீத பங்குகளையும் எலான் மஸ்கின் சொந்த அறக்கட்டளையான எலான் மஸ்ஸ் அறக்கட்டளை வாங்கியுள்ளது. வேன்வார்ட் நிறுவநம் 8.79 சதவீத பங்குகளை ட்விட்டரில் வைத்துள்ளது.