elon musk: எலோன் மஸ்க் மீது பாய்ந்தது வழக்கு: கடுப்பான ட்விட்டர் முதலீட்டாளர்கள் : காரணம் என்ன?

elon musk : ட்விட்டர் நிறுவனத்தை 4400 கோடி டாலருக்கு வாங்குவதாக ஒப்பந்தம் செய்த டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தற்போது தாமதம் செய்து வருகிறார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கலிபோர்னியா நீதிமன்றத்தில் ட்விட்டர் முதலீட்டாள்ரகள், வாரிய நிர்வாகிகள் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

elon musk : Elon Musk sued by Twitter investors for delayed disclosure of stake

ட்விட்டர் நிறுவனத்தை 4400 கோடி டாலருக்கு வாங்குவதாக ஒப்பந்தம் செய்த டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தற்போது தாமதம் செய்து வருகிறார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கலிபோர்னியா நீதிமன்றத்தில் ட்விட்டர் முதலீட்டாள்ரகள், வாரிய நிர்வாகிகள் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதில் வேண்டுமென்றே எலான் மஸ்க் தாமதம் செய்வது குறித்து அமெரிக்கப் பங்குச்சந்தை நிர்வாகிகள் எலான் மஸ்கிடம் விளக்கம் கோரியுள்ளனர்.

elon musk : Elon Musk sued by Twitter investors for delayed disclosure of stake

எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தில் 9 சதவீதத்துக்கும் அதிகமான பங்குகளை விலைக்கு வாங்கினார். இதன் மூலம் அதிகமாக பங்குகளை வைத்திருக்கும் தனிநபர் என்ற பெருமையைப் பெற்றார். ஆனால், ட்விட்டர் நிர்வாகக் குழுவில் அழைப்பு விடுக்கப்பட்டபோது, அதில் இணைவதற்கு எலான் மஸ்க் மறுத்துவிட்டார்

அடுத்த சில நாட்களில் ட்விட்டர் சமூக வலைதளத்தை 4400 கோடி டாலருக்கு நானே வாங்கிக்கொள்கிறேன் என்று எலான் மஸ்க் அறிவித்தார். ட்விட்டர் நிறுவனத்தில் உள்ள ஒவ்வொரு பங்கையும் 54.20 டாலருக்கு வாங்க விரும்புவதாகவும் எலான் மஸ்க் பங்குச்சந்தையில் பைலிங்கில் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக ட்விட்டர் நிறுவனத்துக்கும், எலான் மஸ்கிற்கும் ஒப்பந்தம் கையொப்பமானது. ஆனால், திடீரென ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் தனது முடிவை ஒத்திவைப்பதாக எலான் மஸ்க் தெரிவித்தார்.

எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக கூறியபோது 12 சதவீதம் அதிகரித்த பங்குகள், தனது முடிவை ஒத்திவைப்பதாக அறிவித்தபின் 27 சதவீதம் திடீரென சரிந்தன. 

elon musk : Elon Musk sued by Twitter investors for delayed disclosure of stake

இதையடுத்து ட்விட்டர் நிறுவனத்துக்கு இழப்பு ஏற்படுத்தியதாகவும், ட்விட்டர் நிறுவனத்தைப் பற்றி தவறான தகவல் பரப்பியது, ட்விட்டர் நிர்வாகத்தில் புகுந்து குழப்பத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் கலிபோர்னியா வடக்கு மாவட்ட நீதிமன்றத்தில் எலான் மஸ்க் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

ட்விட்டர் முதலீட்டாளர்கள் சார்பில் வில்லியம் ஹெர்னியாக் என்பவர் கிளாஸ் ஆக்ஸன் வழக்கு எலான் மஸ்க் மீது தொடர்ந்துள்ளார். அதாவது ஒரு குழுவில் பலர் பாதிக்கப்படும்போது அனைவரும் சார்பில் ஒருவர் வழக்குத் தொடர்வது கிளாஸ்ஆக்ஸன் வழக்காகும். அந்த வகையில் எலான் மஸ்க் மீது ட்வி்ட்டர் முதலீட்டாளர்கள் சார்பில் வில்லியம் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios