Dogecoin Investor Sues Elon Musk :கிரிப்டோகரன்ஸிகளில் ஒன்றான டோஜ்காயினின் முதலீட்டாளர் ஒருவர் தனக்கு ஏற்பட்ட இழப்புக்கு 25800 கோடி டாலர் இழப்பீடு தர வேண்டும் எனக் கோரி டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் ஆகியவற்றின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்

கிரிப்டோகரன்ஸிகளில் ஒன்றான டோஜ்காயினின் முதலீட்டாளர் ஒருவர் தனக்கு ஏற்பட்ட இழப்புக்கு 25800 கோடி டாலர் இழப்பீடு தர வேண்டும் எனக் கோரி டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் ஆகியவற்றின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் டோஜ்காயின் குறித்து ஏராளமான விளம்பரங்களையும், ட்விட்டரில் ஆதரவையும் தெரிவித்துள்ளார். இதைநம்பி ஏராளமானோர் டோஜ்காயினில் முதலீடுச செய்தனர். 

ஆனால், முதலீடு செய்தவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு இழப்பைச் சந்தித்த ஒருவரான டோஜ்காயின் முதலீட்டாளர் கேத் ஜான்ஸன் என்பவர்தான் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

நியூயார்க்கில் உள்ள நீதிமன்றத்தில் எலான் மஸ்க், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் மீது ஜான்ஸன் வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் ஜான்ஸன் கூறுகையில் “ ஜோடிகாயின் விற்பனையையும், முதலீட்டையும் அதிகப்படுத்த எலான் மஸ்க் அதிகமாக முக்கியத்துவம் அளித்தார். டோஜிகாயி் கிரிப்டோ என்பது பிரமிடு திட்டமாக இருந்தது. 

கடந்த 2019ம் ஆண்டிலிருந்து டோஜிகாயினில் முதலீடு செய்து வருகிறேன். ஆனால், அதனால் பெரும் இழப்பைத்தான் சந்தித்துள்ளேன். எலான் மஸ்க் டோஜி காயினை முன்மொழிந்து விளம்பரப்படுத்தியதால் அதை நம்பி முதலீட்டாளர்கள் முதலீடு செய்தனர். இதனால் அவர்களுக்கு 8600 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. 

எலான் மஸ்க்தான் டோஜ்காயின் மதிப்பை உயர்த்தி, சந்தையில் அதன் அளவை உயர்த்தி, வர்த்தகத்தை அதிகப்படுத்தி ஊக்கப்படுத்தியுள்ளார். ட்விட்டரில் 9கோடிக்கும் அதிகமான ஃபாலோவர்ஸை கொண்ட எலான் மஸ்க், தனது பக்கத்தில் தொடர்ந்து டோஜ்காயின் குறித்து பெருமையாகப் பேசிவந்தார். அதுமட்டுமல்லாமல் டெஸ்லா காரின் குறிப்பிட்ட பகுதிக்கு டோஜ்காயினை செலுத்தினால் ஏற்கப்படும் என்றும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். ஸ்பேஸ்எக்ஸ் தனது செயற்கைக்கோள் ஒன்றுக்குகூட டோஜ்காயின் என்று பெயரிடப்பட்டிருந்தது.

டோஜிகாயினில் எலான் மஸ்க் பேச்சை நம்பி முதலீடு செய்தவர்களுக்கு இழப்பீட்டை எலான் மஸ்க் வழங்கிட வேண்டும். அவர்களுக்கு ஏற்பட்டஇழப்பை 2 மடங்காக தர வேண்டும். ஒட்டுமொத்தமாக 25800 கோடி டாலர்இழப்பீடு தர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2013ம் ஆண்டு உருவாக்கப்பட்ட கிரிப்டோகரன்ஸிகளில் ஒன்று டோஜ்காயின். பிட்காயின், ஷிபா இனு எனும் நாய் மீம் ஆகியவற்றை வைத்து டோஜ்காயின் உருவாக்கப்பட்டது. 

எலான் மஸ்க்கின் விளம்பரம், அதை உயர்த்திப் பேசியதால் டோஜ்காயின் மதிப்பு அதிகரித்து, 2021ம் ஆண்டில் 0.73 சென்ட் வரை உயர்ந்தது. ஆனால், படிப்படியாகக் குறைந்து டோஜிகாயின் மதிப்பு 6சென்ட்களாக இருக்கிறது