duie to lorry strike vegetables rate is high

கடந்த 3 நாட்களாக தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுங்கவரி ,கலால்வரி, ஆர்டிஓ கட்டண உயர்வு மேலும் வாகன இன்சுரன்ஸ் உள்ளிட்ட பல கட்டண உயர்வை எதிர்த்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக மற்ற மாநிலங்கள் மற்றும் மாவட்டத்திலிருந்து அத்தியாவசிய பொருட்களை கொண்டு வருவதற்கும், அதே வேளையில் மற்ற இடங்களுக்கு கொண்டு செல்வதற்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தொடர்ந்து 3 ஆவது நாளாக லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், காய்கறி மற்றும் உணவு பொருட்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன்படி, பீன்ஸ் கிலோ 7௦ ரூபாயிலிருந்து 9௦ ரூபாயாகவும், கத்திரிக்காய் 45 ரூபாயிலிருந்து 60 ரூபாயாகவும், மற்றும் அனைத்து வகையான காய்கறிகளின் விலையும் உயர்ந்துக் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.