due to closure of tasmac people gaining the worth
தமிழகத்தில் மதுக்கடை மூடலால் அரசுக்கு 11 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது என தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் மதுக்கடை மூடப்பட்டால், எந்த அளவுக்கு வருமானம் குறையும் என கணக்கிட்டு பார்க்கும் அரசு மற்றும் கணிக்கையாளர்கள் , அதே 11 ஆயிரம் கோடி குடிமகன்களின் குடும்பத்திற்கு லாபம் தானே என ஏன் சிந்திக்க மறுக்கிறார்கள் என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அதாவது குடி பழக்கம் இல்லாத குடிமகன்கள் இவ்வாறு கேள்வி எழுப்புகின்றனர். ஆக மொத்தத்தில், நஷ்டத்தை மட்டுமே எண்ணி பார்க்கும் அரசு, மக்கள் அடையும் நன்மைகள் பற்றி சிந்திக்கவில்லையே என பலரும் பேசி வருகின்றனர் .
மதுக்கடைகளை மூட வலியுறுத்தி ஆங்காங்கு வெடித்த போராட்டத்தில், பெண்களின் பங்கு அதிகம் . அதாவது வீட்டுத்தலைவன் குடிபழக்கத்திற்கு அடிமையானால் அந்த குடும்பம் நடு தெருவிற்கு வருகிறது. குடி போதையில் பல குற்ற செயல்களும் நடக்கிறது .
“ குடி குடியை கெடுக்கும் “ என்ற பழமொழிக்கு ஏற்ப, குடி பழக்கத்தால் பல கெடுதல்கள் தான் அதிகம் . இந்நிலையில் 1௦௦௦ மதுக்கடைகள் மூடப்பட்டதால், நன்மைகள் தான் ஏராளம் என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
