“வங்கியில்  போட்ட பணத்தை  திருப்பி  கொடுக்காதீங்க .....” ....பிரதமர் மோடி அதிரடி ...!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்தில் நடந்த  நிகழ்ச்சி யில்  பேசிய பிரதமர், நாட்டில்  வறுமையில் வாடும்  ஏழைகள்  மிக விரைவில் ,  வறுமையிலிருந்து விடுபடுவார்கள் என்றும், 

இன்று பொதுமக்கள்  நீண்ட  வரிசையில் காத்துக்கிடந்து ,  பணத்தை  எடுத்து  செல்கிறார்கள். இவ்வாறு நீண்ட  வரிசையில்  காத்துக்கிடப்பது  இதுவே  கடைசி  முறையாக  இருக்கும்  என்றும்  தெரவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய  பிரதமர், ஜன் தன் வங்கிக் கணக்கு துவங்கும்போது அதுபற்றி ஏழைகளுக்கு என்னவென்று தெரியாது. ஆனால், இன்று பணம் வைத்திருப்பவர்கள் அவர்களைத் தேடி ஓடுகின்றனர்.

அவர்களது கணக்கில் ரூ. 2 லட்சம் வரை டெபாசிட் செய்து வருகின்றனர். ரூபாய்  நோட்டுகள்  செல்லாது என  அறிவித்த  பின்பு , சில  நாட்களிலேயே , ஏழை  மக்களை  தேடி  சென்று, ஜன் தன் வங்கிக்  கணக்கில்  டெபாசிட்  செய்ய , பணத்தை   கொடுத்துள்ளனர் சில  பண   முதலைகள்.

எனவே, இந்த  பணம்  வங்கி  கணக்கிலே  இருக்கட்டும். அது உங்களுக்கு மட்டுமே பயன்படட்டும்......யாரேனும்  உங்களை  மிரட்டி , வங்கியில்  செலுத்தப்பட்ட  பணத்தை   திருப்பி தர  கேட்டால், எனக்கு  ( பிரதமர்  மோடி ) க்கு கடிதம்  எழுதுங்கள்  என  அதிரடியாக  தெரிவித்துள்ளார்..... மோடி.....!!

 அதனால...... வாய்ப்பை  பயன்படுத்தி கொள்வது உங்கள்  கையில் தான் உள்ளது......!!!