donkey milk: donkey: தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆயிரக்கணக்கில் சம்பாதித்த இளைஞர் அந்த வேலையை உதறவிட்டு கழுதைப் பண்ணை வைத்து, கழுதைப் பால் மூலம் மாதத்துக்கு லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். மாதத்துக்கு சராசரியாக ரூ17 லட்சத்துக்கு கழுதைப் பால் ஆர்டர்கள் குவிகின்றன

தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆயிரக்கணக்கில் சம்பாதித்த இளைஞர் அந்த வேலையை உதறவிட்டு கழுதைப் பண்ணை வைத்து, கழுதைப் பால் மூலம் மாதத்துக்கு லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். மாதத்துக்கு சராசரியாக ரூ17 லட்சத்துக்கு கழுதைப் பால் ஆர்டர்கள் குவிகின்றன

2-வது பண்ணை

கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் கவுடா(வயது42) என்ற இளைஞர்தான் கழுதைப் பண்ணை வைத்து லட்சக்கணக்கில் சம்பாதித்துள்ளார். நாட்டிலேயே முதல்முறையாக கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் கழுதைப் பண்ணை வைக்கப்பட்டது, அதன்பின் இங்கு தொடங்கப்பட்டுள்ளது.

ஐடி நிறுவன வேலை

2020ம் ஆண்டுவரை பெங்களூருவில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் மாதம் ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் ஸ்ரீனிவாஸ்கவுடா பணியாற்றினார். அந்த வேலையை உதறிவிட்டு, தன்னுடைய ஐரா கிராமத்தில் 2.3ஏக்கர் நிலத்தில் ஐசரி பண்ணை என்ற பெயரில் பண்ணையை தொடங்கினார். முதலில் முயல் வளர்ப்பு, கடக்காநாத் கோழிகள், ஆடுகள் என்று வளர்த்தார். இப்போது உயர்ரக கழுதைகளை வாங்கி வளர்த்து அதன் மூலம் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டி வருகிறார்.

ரூ.42 லட்சம் முதலீடு

ரூ.42 லட்சம் முதலீட்டில் 20 கழுதைகளை வாங்கியுள்ளார் ஸ்ரீனிவாஸ் கவுடா. ஆனால், சில மாதங்களிலேயே அந்த கழுதைகள் அவருக்கு போட்ட முதலீட்டை எடுத்துக்கொடுத்து, தற்போது லட்சக்கணக்கில் லாபத்தில் ஸ்ரீனிவாஸ் பண்ணை செயல்படுகிறது.

இதுகுறித்து ஸ்ரீனிவாஸ் கவுடா செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் “ நான் மென்பொருள் நிறுவனத்தில் 2020ம் ஆண்டுவரை பணியாற்றினேன். அந்த வேலையை விட்டு முதல் பண்ணை வைத்தேன். இப்போது ரூ.42 லட்சத்தில் 20 கழுதைகளை வாங்கி வளர்த்து வருகிறேன். இந்தியாவில் 2வதும், கர்நாடகாவில் முதலாவது கழுதைப் பண்ணையாகும்.

கேலி கிண்டல்

கழுதைப் பாலுக்கு தனி மருத்துவக் குணம் இருப்பதால் ஏராளமானோர் வாங்கிச் செல்கிறார்கள். ஆர்டர்களும் வருகின்றன. நான் முதலில் கழுதைப் பண்ணை வைக்கப் போகிறேன் என்றவுடன் பலரும் சிரித்தார்கள், உதாசினப்படுத்தினார்கள். ஆனால், கழுதைப் பால் மூலம் லட்சக்கணக்கில் வருமானம் வருவது தெரிந்தபின் பேசவி்ல்லை.

ரூ17 லட்சம் ஆர்டர்

கழுதைப் பாலுக்கு நல்லகிராக்கி இருக்கிறது. 30 மில்லி கொண்ட கழுதைப் பால் பாக்கெட் ரூ.150க்கு விற்கப்படுகிறது. எனக்கு இப்போதே ரூ.17 லட்சத்துக்கு கழுதைப் பால் விற்பனைக்கு ஆர்டர்கள் குவிந்துள்ளன. இந்த கழுதைப் பால் பாக்கெட் ஷாப்பிங் மால், சூப்பர்மார்க்கெட்டுகளில் கிடைக்கும். கழுதைப் பால் சுவையானது, விலை மதிப்புள்ளது, குறிப்பாக அதிகமான மருத்துவகுணம் நிறைந்தது” எனத் தெரிவித்தார்