Asianet News TamilAsianet News Tamil

diesel price today:பெட்ரோல் லிட்டருக்கு ரூ.18, டீசலுக்கு ரூ.25 நஷ்டத்தில் விற்பனை: கண்ணீரில் விற்பனையாளர்கள்

diesel price today; today petrol price:பெட்ரோல் லிட்டருக்கு ரூ.14 முதல் 18 வரையிலும், டீசல் லிட்டருக்கு ரூ.20முதல் 25 வரையிலும் இழப்பு ஏற்படுகிறது. உடனடியாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் தலையிட வேண்டும்எ ன்று (private fuel retailers )தனியார் சில்லரை விற்பனையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

diesel price today; today petrol price:  Selling diesel at Rs 20-25/ltr loss, petrol at Rs 14-18/ltr loss: Retailers
Author
New Delhi, First Published Jun 20, 2022, 12:29 PM IST

பெட்ரோல் லிட்டருக்கு ரூ.14 முதல் 18 வரையிலும், டீசல் லிட்டருக்கு ரூ.20முதல் 25 வரையிலும் இழப்பு ஏற்படுகிறது. உடனடியாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் தலையிட வேண்டும்என்று தனியார் சில்லரை விற்பனையாளர்கள்(private fuel retailers ) கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரிலையன்ஸின் ஜியோ-பிபி, நயாரா எனர்ஜி ஆகியவற்றின் எரிபொருளை வாங்கி விற்பனை செய்யும் சில்லரை விற்பனையாளர்கள் இந்த கோரிக்கையை மத்திய அரசிடம் தெரிவித்துள்ளனர்.

diesel price today; today petrol price:  Selling diesel at Rs 20-25/ltr loss, petrol at Rs 14-18/ltr loss: Retailers

இந்திய பெட்ரோலிய தொழில் கூட்டமைப்பின் தலைவர் குர்மீத் சிங் கடந்த 10ம் தேதி மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.  அதில் அவர் கூறியிருபப்தாவது

“ அரசு எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத்பெட்ரோலியம், ஹெச்பிசிஎல் ஆகிய நிறுவனங்கள் சர்வதேச சந்தை விலை நிலவரத்துக்கு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் இருப்பதால் தனியார் நிறுவனங்களுக்கும் தொடர்ந்து இழப்பு ஏற்படுகிறது. இந்தியாவில் 90 சதவீத சந்தையை அரசு எண்ணெய் நிறுவனங்கள்தான் வைத்துள்ளன. 

பெட்ரோல், டீசலில் ஏற்படும் இழப்பைத் தடுத்து நிறுத்த வேண்டும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. ஆனால், அரசு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதில்லை. உற்பத்தி விலைக்கும் குறைவாக பெட்ரோல், டீசல் விலையை விற்பதால் கடும் இழப்பை சந்திக்கிறோம்.  

diesel price today; today petrol price:  Selling diesel at Rs 20-25/ltr loss, petrol at Rs 14-18/ltr loss: Retailers

இந்த சிக்கலில் இருந்து மீள்வதற்கு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டும் அல்லது நாங்கள் வாடிக்கையாளர்களை இழக்க வேண்டும். அல்லது விற்பனையைக் குறைத்து இழப்பைக் குறைக்க வேண்டும். 

2022, மார்ச் 22ம் தேதி முல் 14 முறை பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 80 காசுகள் வரை மாற்றியமைக்கப்பட்டது. இதன் மூலம் பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.10 வரை உயர்ந்தது. ஆனால், அதன்பின் விலை உயர்த்தப்படாததால், பெட்ரோல், டீசலுக்கு எண்ணெய் நிறுவனங்கள் சந்திக்கும் இழப்பு அதிகரித்து வருகிறது. டீசல் லிட்டருக்கு ரூ.20 முதல் ரூ.25வரையிலும், பெட்ரோல் ரூ.14முதல் ரூ18 வரையிலும் இழப்பு ஏற்படுகிறது.

கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் சில்லரை விற்பனையில் எந்தவிதமான விலைஉயர்வும் இல்லாத நிலையில் மொத்தமாக பெட்ரோல்,டீசல் கொள்முதல் செய்பவர்களுக்கு மட்டுமே சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப விலை மாற்றியமைக்கப்படுகிறது.

diesel price today; today petrol price:  Selling diesel at Rs 20-25/ltr loss, petrol at Rs 14-18/ltr loss: Retailers

, தனியார் எண்ணெய் நிறுவனங்கள் கடினமான தருணத்தை எதிர்கொண்டு வரும் இந்த தருணத்தில், சில்லரை விலையில் பெட்ரோல், டீசல் விற்பனையில் மத்திய அரசின் ஆதரவு தேவை. தொடர்ந்து இழப்பு ஏற்படுவதால் புதிதாக முதலீடு செய்வதும் கடினமாகிவிடுகிறது. இதனால் சில்லரைவிற்பனையாளர்கள், வினியோகிஸ்தர்கள், நேரடி மறைமுக பயனாளிகள் பாதிக்கப்படுகிறார்கள். ஆதலால் சில்லரை விற்பனையாளர்களுக்கு நிவாரணம் அளிக்கவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்க வேண்டும்

இவ்வாரு குர்மீத் சிங் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios