டீசல் விலை ரூ. 7 குறைவு...! பரவாயில்லையே....

https://static.asianetnews.com/images/authors/fb8d4d14-0372-5b95-af41-84d4a15f3aeb.jpg
First Published 26, Nov 2018, 12:46 PM IST
diesel cost reduced around rs7
Highlights

கடந்த இரண்டு மாதங்கள் முன் வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணமே இருந்தது.. இன்னும் சொல்லப்போனால் பெட்ரோல் விலை ரூ.100 தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

கடந்த இரண்டு மாதங்கள் முன் வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணமே இருந்தது.. இன்னும் சொல்லப்போனால் பெட்ரோல் விலை ரூ. 100 தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதனை கண்டித்து மத்தியில் ஆளும் பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சியான காங்கிரஸ் நாடு முழுக்க  ஒருநாள் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்தியது. தொடர் விலை உயர்வுக்கு காரணம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை உயர்வு..

இதனை தொடர்ந்து தற்போது தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வு ஆகியவற்றின் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து இறங்குமுகமாக இருந்து வருகிறது. 

அதன்படி பார்த்தால், கடந்த ஒரு மாத கால அளவில் டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாய் அளவுக்கு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிலவரப்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை..! 

பெட்ரோல் லிட்டருக்கு 37 காசுகள் குறைந்து 77 ரூபாய் 32 காசுகளுக்கு விற்பனையாகிறது. இதேபோல் டீசலும் 43 காசுகள் குறைந்து 73 ரூபாய் 20 காசுகளுக்கு விற்பனையாகிறது.

டீசல் விலை ரூ.7 குறைவு 

டீசல் விலையை பொறுத்தவரையில், கடந்த மாதம் 17 ஆம் தேதி 80 ரூபாயைத் தாண்டியது. ஆனால் தற்போது 7 ரூபாய் அளவுக்கு குறைந்து இன்று 73 ரூபாய் 20 காசுகளுக்கு விற்கப்படுகிறது. மேலும் பாஜக ஆட்சியில் இருக்கும் வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலை இனி படிப்படியாக குறையும் என  மத்திய அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
 

loader