நட்சத்திர குழந்தைகள் படிக்கும் திருபாய் அம்பானி பள்ளிக் கட்டணம்! ஒரு மாதத்திற்கே இத்தனை லட்சமா?

டிசம்பரில் நடைபெற்ற திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் ஸ்கூலின் ஆண்டு விழாவில் பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். பல நட்சத்திரக் குழந்தைகள் இங்கு படிக்கின்றனர். இந்த பள்ளியின் கல்விக்கட்டணம் எவ்வளவு தெரியுமா?

Dhirubhai Ambani International School Fees structure here are the full details Rya

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பரில் நடைபெறும் திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் ஸ்கூலின் (டிஏஐஎஸ்) ஆண்டு விழா நிகழ்ச்சி கவனம் ஈர்த்து வருகிறது. நீதா அம்பானி தலைமையிலான திருபாய் அம்பானியின் சர்வதேச பள்ளியின் வருடாந்திர நாள் விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இருப்பினும், மும்பையில் உள்ள புகழ்பெற்ற இந்த பள்ளி ஒரு மாதத்திற்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறது தெரியுமா?

மழலையர் வகுப்பு முதல் வகுப்பு 12 வரை உள்ள திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் ஸ்கூல் (DAIS) ரிலையன்ஸ் குழுமத்தின் நீதா அம்பானியால் 2003 இல் நிறுவப்பட்டது. உலகத் தரம் வாய்ந்த கல்வி வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்துடன். தொடங்கப்பட்ட இந்த பள்ளி CISCE (இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில்) மற்றும் CAIE (கேம்பிரிட்ஜ் மதிப்பீடு சர்வதேச கல்வி) ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.  மேலும் ICSE (இந்திய இடைநிலைக் கல்விச் சான்றிதழ்) கல்வி திட்டத்திற்கு மாணவர்களைத் தயார்படுத்துகிறது.

IGCSE (International General Certificate of Secondary Education) வகுப்பு 10 தேர்வுகள். 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு, IB டிப்ளோமா திட்டத்தை வழங்குவதற்கு IB (சர்வதேச இளங்கலை) மூலம் பள்ளி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. திருபாய் அம்பானி  பள்ளி மழலையர் பள்ளி முதல் வகுப்பு 12 வரை உலகத் தரம் வாய்ந்த கல்வியை வழங்குகிறது. இது ICSE, IGCSE மற்றும் IBDP பாடத் திட்டங்களையும் வழங்குகிறது.

கல்விக்காக மட்டுமின்றி விலையுயர்ந்த கல்வி கட்டணத்திற்காகவும் திருபாய் அம்பானி பள்ளி அறியப்படுகிறது. திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் பள்ளியின் 2023-2024 கல்வியாண்டுக்கான கல்விக் கட்டணம் மழலையர் பள்ளிக்கு ரூ. 1,400,000 முதல் 12-ம் வகுப்புக்கு ரூ. 2,000,000 வரை இருக்கும். இந்த கவ்லி கல்விக் கட்டணம் சீருடை புத்தகங்கள், ஸ்டேஷனரி, போக்குவரத்து செலவுகளை உள்ளடக்கியது. 

இந்த பள்ளி, தகுதியான மாணவர்களுக்கு அதன் சிறந்த கல்வி வாய்ப்புகளை அணுகுவதை உறுதிசெய்ய உதவித்தொகை மற்றும் நிதி உதவியையும் வழங்குகிறது.

திருபாய் அம்பானி சர்வதேச பள்ளி மாணவர்கள்

மும்பையில் உள்ள பள்ளி சில பணக்கார மற்றும் செல்வாக்கு மிக்க குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைள் திருபாய் அம்பானி பள்ளியில் தான் படிக்கின்றனர். ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சனின் மகள் ஆராத்யா பச்சன், ஷாருக்கான் மற்றும் கௌரி கான் ஆகியோரின் மகன் அப்ராம், சைஃப் அலி கான் மற்றும் கரீனா கபூர் கான் ஆகியோரின் மகன்கள் தைமூர் அலி கான் மற்றும் ஜெஹ் அலி கான் உள்ளிட்ட பல நட்சத்திர குழந்தைகள் இந்த பள்ளியில் படிக்கின்றனர்.

ஜான்வி கபூர், சுஹானா கான், குஷி கபூர், இப்ராஹிம் அலி கான், ஆர்யன் கான், சாரா டெண்டுல்கர், நைசா தேவ்கன் மற்றும் அனன்யா பாண்டே ஆகியோர் இந்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ஆவர்.

சமீபத்தில் நடைபெற்ற திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியின் ஆண்டு விழாவில் பல பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஷாருக்கான், அவரது மனைவி கௌரி கான் மற்றும் மகள் சுஹானா கான் ஆகியோர் தங்கள் இளைய மகன் அபிராமை உற்சாகப்படுத்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கரீனா கபூர் கான் தனது கணவர் சைஃப் அலி கானுடன் மேடையில் நடித்த அவர்களின் குழந்தைகளான தைமூர் அலி கான் மற்றும் ஜெஹ் அலி கான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் மாமனார் அமிதாப் பச்சனுடன் காணப்பட்டார். ஷாஹித் கபூர் தனது மனைவி மீரா கபூருடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ரித்தேஷ் தேஷ்முக்-ஜெனிலியாவும் இந்த ஆண்டு விழாவில் கலந்து கொண்டனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios