டையம்லர்  நிறுவனம் ஆட்டோமொபைல் சந்தையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு மெர்சிடிஸ் பென்ஸ் AG என ரி-பிராண்டு செய்து கொண்டது.

டையம்லர் நிறுவனம் தன்னைத் தானே மெர்சிடிஸ் பென்ஸ் AG என ரி பிராண்டு செய்து கொண்டது. ஆட்டோமொபைல் சந்தையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு இந்த முடிவை எட்டியிருப்பதாக அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது. ரி பிராண்டு செய்யப்பட்டதை தொடர்ந்து மெர்சிடிஸ் பென்ஸ், மெர்சிடிஸ் AMG, மெர்சிடிஸ் மேபேக் மற்றும் மெர்சிடிஸ் EQ பிராண்டுகள் மீது அதிக கவனம் செலுத்த இருப்பதாக மெர்சிடிஸ் பென்ஸ் AG தெரிவித்து உள்ளது.

முன்னதாக வணிக வாகனங்கள் பிரிவை முற்றிலும் தனி நிறுவனமாக மாற்ற திட்டமிட்டு வருவதாக டையம்லர் ஏற்கனவே அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமின்றி வணிக வாகனங்கள் பிரிவு டையம்லர் டிரக் எனும் பெயரில் தனி நிறுவனமாக உருவாகும் என்றும் தெரிவித்து இருந்தது. 

"மெர்சிடிஸ் பென்ஸ் AG என பெயர் மாற்றிக் கொண்டதன் மூலம் எங்களின் தலையாய நோக்கத்தை புதுப்பித்து இருக்கிறோம். இவ்வாறு செய்வதன் மூலம், எங்கள் நிறுவனத்தின் அடித்தளம் - உலகில் பெரும்பாலானோர் விரும்பும் கார்களை உருவாக்க வேண்டும். மெகர்சிடிஸ் ஸ்டார் எப்போதும் எதிர்காலத்தின் வாக்குறுதியாக இருந்துள்ளது. எங்களது நிறுவனர்களின் தனித்துவத்தை கைவிடாமல் எலெக்ட்ரிக் மொபிலிட்டி மற்றும் வாகனங்கள் மென்பொருள் பிரிவிலும் அதனை நிலைநாட்டுவோம்," என மெர்சிடிஸ் பென்ஸ் AG ததலைவர் ஓலா கலினியஸ் தெரிவித்தார். 

இந்த நடவடிக்கை இரு நிறுவனங்களும் ஆட்டோமோடிவ் துறை தலைவர்கள் என பங்குதாரர் மதிப்பின் முழு திறனை வெளிப்படுத்தும் என கலினியஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். டையம்லர் நிறுவனத்தின் இன்றைய மதிப்பி 77 பில்லியன் யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 6500 கோடி ஆகும்.