daily lots of work alloted for youngsters said cent govt

தினமும் இத்தனை பேருக்கு வேலையா? மத்திய அரசு அறிவிப்பு...

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்தியாவில் வேலைவாய்ப்பு குறையவில்லை என்றும், மேலும் இரண்டு சதவீதம் கூடுதலான வேலைவாய்ப்பை மத்திய அரசு கடந்த ஆண்டில் வழங்கி உள்ளது என வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதன்படி,கடந்த நிதி ஆண்டை பொறுத்தவரையில்,தினமும் 1,100 பேருக்கு குறிப்பிட்ட துறையில் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது

2016-17ஆம் ஆண்டில்

ஒரு நாளைக்கு 1,100 வேலைவாய்ப்புகள் வீதம் 4.16 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும்,இது கடந்த 2015-16ஆம் நிதி ஆண்டை விட 2% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவை பொறுத்தவரை ஆண்டுதோறும் சுமார் 8 லட்சம் பேருக்கு வேலை வாய்புகள் உருவாக்கப்படுகிறது.

அதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால்,வகைபடுத்தப்பட்ட துறையில் மட்டும் 50 %, மற்றவை வகைப்படுத்தப்படாத துறை...பணமதிப்பிழப்பு நடவடிக்கையால்,வகைபடுத்தப்படாத துறையில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்றும் மத்திய வேலை வாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது .