da hike news: 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 68 லட்சம் ஓய்வூதியதார்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி மத்தியஅ ரசு இன்று அறிவித்துள்ளது. இந்த அகவிலைப்படி 2022, ஜனவரி 1ம் முதல்முன்தேதியிட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

47 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 68 லட்சம் ஓய்வூதியதார்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி மத்தியஅ ரசு இன்று அறிவித்துள்ளது. இந்த அகவிலைப்படி 2022, ஜனவரி 1ம் முதல்முன்தேதியிட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

இதன்படி அரசு ஊழியர்களுக்கு இதுவரை 31 சதவீதம அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்தது. மத்திய அரசு தற்போது 3 சதவீதம் உயர்த்தியுள்ளதால், இனிமேல்அகவிலைப்படி 34 சதவீதமாக அதிகரி்க்கும். ஜனவரி மற்றும் பிப்ரவரி மார்ச்,மாதங்களில் நிலுவைத் தொகையும் சேர்த்து, ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும்போது ஊதியம் அதிகரி்க்கும். 

இதன் மூலம் 47லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68 லட்சம் ஓய்வூதியதாரர்கள் என ஒரு கோடிக்கும் அதிகமானோர் பலன் பெறுவார்கள்.
7-வது ஊதியக்குழு வந்தபின், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்த்தப்படும். அந்தவகையில் ஜனவரி மாதத்துக்கான படி மார்ச்சில் உயரும், அடுத்ததாக ஜூலை மாதம் அகவிலைப்படி உயர்வு கிடைக்கும்.

கடந்த ஆண்டு கொரோனா காலத்திலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைபப்டி 28%லிருந்து 31%மாக உயர்த்தப்பட்டது இப்போது கூடுதலாக 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் “ பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன்படி அடிப்படை ஊதியத்தில் 31 சதவீதமாக இருந்தது கூடுதலாக3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.9,544 கோடி செலவாகும். இந்த அகவிலைப்படி ஜனவரி 1ம் தேதி முன்தேதியிட்டு வழங்கப்படும் என்பதால் அரசு ஊழியர்கள் 3 மாத நிலுவைத் தொகை பெறுவார்கள்.