customers can deposit in any atm

வங்கியில் பணம் டெபாசிட் செய்வதற்கு, நாம் எந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளோமோ அதே வங்கி கிளையில் உள்ள ஏடிஎம் மையத்தில் தான் டெபாசிட் செய்ய முடியும்.

ஆனால் இனி எந்த ஏடிஎம்மிலும் பணம் டெபாசிட் செய்யலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது . அதன் படி, முதற்கட்டமாக தற்போது 3 மற்ற வங்கி ஏடிஎம் மையத்தில் டெபாசிட் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது

இதன் மூலம், இனி எந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும் வேறு வங்கி ஏடிஎம் மூலம் பணம் டெபாசிட் செய்யும் வசதி விரைவில் வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புது திட்டத்தை பற்றி தேசிய பேமன்ட் கார்ப்பரேஷன் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். இந்த மாதம் இறுதிக்குள் இந்த சேவை தொடங்க உள்ளதாகவும், ரூ.10,000 வரை டெபாசிட் செய்தால், 25 ரூபாயும், ரூ.50,000 ரூபாய் வரை டெபாசிட் செய்தால், 50 ரூபாயும் சேவை வரியாக வசூல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார் .