cryptocurrency tax :கிரிப்டோகரன்ஸி மற்றும் டிஜிட்டல் சொத்துக்கள் பரிமாற்றத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு 30 சதவீதம் வரிவிதிக்கும் நடைமுறை இன்றுமுதல்(ஏப்ரல்1ம்தேதி) நடைமுறைக்கு வந்துள்ளது.
கிரிப்டோகரன்ஸி மற்றும் டிஜிட்டல் சொத்துக்கள் பரிமாற்றத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு 30 சதவீதம் வரிவிதிக்கும் நடைமுறை இன்றுமுதல்(ஏப்ரல்1ம்தேதி) நடைமுறைக்கு வந்துள்ளது.
புதிய நிதியாண்டு
2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு புதியதிட்டங்களையும், விதிமுறைகளையும் அறிவித்தார். அந்த விதிகள் அனைத்தும், ஏப்ரல்1ம்தேதி முதல் (இன்று) நடைமுறைக்கு வருகிறது.

அசையா சொத்துக்கள்
இதன்படி, அசை சொத்துக்களை ரூ.50 லட்சத்துக்கு மேல் விற்கும்போது, ஒரு சதவீதம் டிடிஎஸ் பிடிக்கும் நடைமுறையும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அசையா சொத்துக்களை விற்கும்போது, பத்திரங்கள் மதிப்பின் அளவைப் பொறுத்து டிஎஸ்எஸ் ஒரு சதவீதம் கழிக்கப்படும். இதில் இதுஅதிகமானதோ அது கணக்கில் கொள்ளப்படும்.

வருமானவரி ரிட்டன்
2022-23 நிதியாண்டு தொடக்கத்திலிருந்து வருமானவரி செலுத்துவோர் தங்களின் வருமானவரி ரிட்டனை அப்டேட் செய்து பதிவேற்றம் செய்யும்போது அல்லது தாக்கலின்போது அசல் ஐடிஆர் தாக்கல் செய்யலாம். இதுபோன்ற அப்டேட் செய்யப்பட்ட ரிட்டனை ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் தாக்கல் செய்யலாம்.

30% வரி விதிப்பு
கிரிப்டோ கரன்ஸி மற்றும் மெய்நிகர் டிஜிட்டல் சொத்துகள் மூலம் வருமானம் ஈட்டினால் அதற்கு 30 சதவீதம் வரிவிதிக்கும் நடைமுறை இன்றுமுதல்(ஏப்ரல்1ம் தேதி) நடைமுறைக்கு வருகிறது. வருமானவரி செலுத்துவோர் ஒட்டுமொத்த வருமானம் ரூ.2.50லட்சத்துக்கும் குறைவாக இருந்தாலும், கிரிப்டோமூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வரிவிதிக்கப்படும்.
அதுமட்டுமல்லாமல் வருமாவரி கழிவுக்காகச் செய்யப்படும் செலவுகள் இனிமேல் கணக்கில் கொள்ளப்படாது. பிரிவு14ஏ இன்றுமுதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
வட்டி தள்ளுபடி
முதல்முறையாக வீடு வாங்குவோருக்காக நிதிச்சட்டம்2022 இன்றுமுதல் நடைமுறைக்கு வருகிறது. இதன்படி, மலிவு விலையில் முதல்முறையாக வீடுவாங்குவோர் பெற்ற கடனில் ரூ.1.50 லட்சம் வரை வட்டியில் விலக்கு அளிக்கப்படும். இதற்கான வீட்டுக்கடன் 2019-20ம் ஆண்டில் வழங்கப்பட்டிருக்க வேண்டும், வீட்டின் பத்திரமதிப்பு ரூ.45 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்,

வருமானவரி செலுத்துவோர் அல்லது வீடு வாங்குவோருக்கு சொந்தமாக வேறு எந்த வீடும் இருக்கக் கூடாது. வீட்டுக்கடன் 2020 மார்ச்31 முதல் 2021,மார்ச் 31வரை பெற்றவர்களுக்கும் இது பொருந்தும். இதன் மூலம் வீடுவாங்குவதற்காக கடன் பெற்றவர்கள் வட்டியில் தள்ளுபடி பெற முடியும். ஆனால், சந்தைநிலவரத்தின் அடிப்படையில் வட்டிவீதம் கழிக்கப்படாது.அதிகமான வட்டியில் கடன் பெற்று வீடுவாங்கும் மக்களின் சுமையைக் குறைக்க இந்த திட்டம் வழி செய்கிறது
