cryptocurrency :கல்வி தொடர்பான ஆப்ஸ்களை வழங்கும் பைஜூஸ், அன்அகாடமி போன்றவைகள் பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து தொடர்ந்து நெருக்கடி கொடுப்பதாக புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து அவற்றுக்கு கடிவாளம் போட மத்திய நுகர்வோர் துறை அமைச்சகம்  திட்டமிட்டுள்ளது.

கல்வி தொடர்பான ஆப்ஸ்களை வழங்கும் பைஜூஸ், அன்அகாடமி போன்றவைகள் பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து தொடர்ந்து நெருக்கடி கொடுப்பதாக புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து அவற்றுக்கு கடிவாளம் போட மத்திய நுகர்வோர் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

மத்திய நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் ரோஹித் குமார் சிங் கூறியதாவது

 “ கிரிப்டோகரன்ஸி குறித்து தற்போது ஏராளமான விளம்பரங்கள் வருகின்றன. ஆனால், நுகர்வோர்கள் கிரிப்டோகரன்ஸி குறித்து அறிந்துகொள்ளுதலும், விழிப்புணர்வு பெறுதலும் அவசியம். மக்கள் கிரிப்டோவில் முதலீடு செய்யும் முன் அதில் உள்ள இடர்பாடுகள் குறித்து எச்சரிக்கை தேவை. அதற்காகவே விரிவான கேள்வி,பதில்கள் கொண்ட அறிக்கையை தயாரிக்க இருக்கிறோம்.

கல்வி தொடர்பான சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் பள்ளிக்குழந்தைகளுக்கு அதிகமான அழுத்தத்தை அளிப்பதாக புகார்கள் வருகின்றன. இது தொடர்பாக விரிவான வழிகாட்டு வழிமுறைகள், விதிகள் உருவாக்கப்பட உள்ளன. 

பைஜூஸ் மற்றும் அன்அகாடமி போன்ற கல்விதொழில்நுட்ப நிறுவனங்கள் நடைமறைக்கு சாத்தியமில்லாத விளம்பரங்களை வெளியிடுகின்றன. அதுகுறித்தும் புகார்கள் வந்தன. விரைவில் அந்த நிறுவனங்கள் மட்டுமல்லாது கல்விதொடர்பான ஆப்ஸ் நடத்தும் நிறுவனங்களை அழைத்து ஆலோசனை நடத்தப்படும்.

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப்பின், ஒரு குழு அமைத்து கல்வி ஆப்ஸ் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதுகுறித்த வழிகாட்டுதல், வழிமுறைகள் வழங்கப்படும்.

இந்தக் குழுவில் மின்னணு வர்த்தக நிறுவனங்களான அமேசான், ரிலையன்ஸ், நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள், சட்ட நிறுவனங்கள் இடம் பெறும். மேலும், மின்னணு வர்த்தக தளங்களில் பொருட்கள் குறித்து போலியான விமர்சனங்கள், மக்கள் வாங்கும்வகையில் தூண்டிவிடும் விமர்சனங்கள் வெளியிடுவது குறித்தும் வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்படும்
இவ்வாறு ரோஹித் குமார் சிங் தெரிவித்தார்