crude oil price : இதுவரை இல்லாத வகையில் இந்தியாவுக்கு ஒரு பேரல் 35 டாலர் குறைவாக கச்சா எண்ணெய் விற்பனை செய்ய ரஷ்யா தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை இல்லாத வகையில் இந்தியாவுக்கு ஒரு பேரல் 35 டாலர் குறைவாக கச்சா எண்ணெய் விற்பனை செய்ய ரஷ்யா தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தபின் அந்நாட்டின் மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்தன. ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவும் அமெரிக்கா தடை விதித்தது. ஐரோப்பிய நாடுகளுக்கு 65 சதவீதம் கச்சா எண்ணெய் ரஷ்யாதான் ஏற்றுமதி செய்துவருகிறது, உலகளவில்தேவையில் 10 சதவீதத்தை ரஷ்யா கையில் வைத்துள்ளது.

இந்நிலையில் ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையால், கச்சா எண்ணையை நட்பு நாடுகளுக்கு சலுகை விலையில் ரஷ்யா வழங்க முன்வந்துள்ளது. 

அந்த வகையில் இந்தியாவுக்கு ஒருபேரல் கச்சா எண்ணைய் விலையை தற்போதைய சந்தை விலையைவிட 35 டாலர் குறைவாக விற்பனை செய்ய ரஷ்யா தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் இந்தியாவுக்கு இந்த ஆண்டு 1.50 கோடி பேரல்கள் வழங்கவும் ரஷ்யா தயாராக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சு நடந்து வருகிறது.

ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும்பட்சத்தில் அதற்குரிய தொகையை ரூபாய்-ரஷ்ய ரூபிளில் வழங்கவும் இருநாடுகளுக்கு இடையே பேச்சு நடந்து வருகிறது. இதுவரை எந்த இறுதிமுடிவும் எடுக்கப்படாத நிலையில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இன்று இரு நாட்கள் பயணமாக இந்தியா வருகிறார். அப்போது ரஷ்ய வெளியுறவு அமைச்சர் பிரதமர் மோடியுடன் இது குறித்து ஆலோசிக்கலாம் எனத் தெரிகிறது

ரஷ்யாவிலிருந்து இந்தியா நேரடியாக கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் பட்சத்தில் இ்ந்தியன் ஆயில் பங்குதாரராக இருக்கும் ரஷ்யாவின் ரோஸ்நெப்ட் பிஜேஎஸ்சி நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யலாம். 

இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்தியன் ஆயில் நிர்வாகிகளும், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகமும் மறுத்துவிட்டன
பால்டிக் கடலில் வழியாக கச்சா எண்ணெய் கொண்டுவந்தால் சிக்கல் இருக்கும் என்பதால், விளாடிவோஸ்டக் துறைமுகத்திலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதி இந்தியாவுக்கு இருக்கும் எனத் தெரிகிறது.இங்கிருந்து இந்தியாவுக்கு எண்ணெய் ஏற்றுமதி நடந்தால் 20 நாட்களில் இந்தியா வந்து சேரும்.

அதேபோல இந்தியாவும் மருந்துகள், மருந்துப்பொருட்கள், பொறியியல் சாதனங்கள், ரசாயனங்களை ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யவும் ஆர்வமாக இருக்கிறது. ஆயுதங்கள் வாங்கியதில் ஏற்பட்ட வர்த்தகப்பற்றாக்குறையை இடைவெளியைக் குறைக்கவும் இந்தியா வாய்ப்பைபயன்படுத்துகிறது