Asianet News TamilAsianet News Tamil

crude oil price: இறங்குது: குறையும் கச்சா எண்ணெய் விலை: பெட்ரோல், டீசல்விலை உயர்வு ஒத்திவைக்கப்படுமா?

crude oil price:சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்தவாரத்திலிருந்து படிப்படியாக இறங்கி வருகிறது. இன்றையவர்த்கத்தில் பேரல் ஒன்று 4 டாலர் வரை சரிந்துள்ளது. 

crude oil price: Oil prices slide by about $4 per barrel
Author
Beijing, First Published Mar 14, 2022, 12:10 PM IST

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்தவாரத்திலிருந்து படிப்படியாக இறங்கி வருகிறது. இன்றையவர்த்கத்தில் பேரல் ஒன்று 4 டாலர் வரை சரிந்துள்ளது. 

விலை உயர்வு

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தபின், அந்நாட்டுக்கு எதிராக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்தன, ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இயற்கை எரிவாயு இறக்குமதி செய்யவும் தடைவிதித்தன. இதனால் கடந்த வாரத்தின் தொடக்கத்தில் பிரன்ட் கச்சா எண்ணெய்விலை 140 டாலரைத் தொட்டது.

crude oil price: Oil prices slide by about $4 per barrel

ஐக்கிய அரபு அமீரகம்தலையீடு

இதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் தேவையைச் சமாளிக்க உற்பத்தியை அதிகரிப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் அரசு முன்வந்தது. கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் ஒபேக் கூட்டமைப்பும் தினசரி உற்பத்தியை 4 லட்சம் பேரல்களில் இருந்து 8 லட்சம் பேரல்களாக உயர்த்துவதாக அறிவித்தது. 

இறங்கும் விலை

இதையடுத்து, கடந்த வாரத்தின் இறுதி நாட்களில் கச்சா எண்ணெய் விலை படிப்படியாக இறங்கியது. இந்நிலையில் வாரத்தின் தொடக்க நாளான இன்று கச்சா எண்ணெய்விலை பேரல் ஒன்றுக்கு சராசரியாக 4 டாலர்கள் வரைச் சரிந்துள்ளது.உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு வருவதற்கு ரஷ்யா விருப்பம் தெரிவிக்கலாம் என்பதால், கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் இறங்கத் தொடங்கியுள்ளது. 

crude oil price: Oil prices slide by about $4 per barrel

தொடர்ந்து சரிகிறது

பிரன்ட் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 4.12 டாலர் குறைந்து 108.55 டாலராகச் சரிந்துள்ளது. வெஸ்ட் டெக்சாஸ் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 3.93 டாலர் சரிந்து, 105.40 டாலருக்கு விற்கப்படுகிறது. கடந்த மாதம் 24ம் தேதியிலிருந்து இரு சந்தைகளிலும்கச்சா எண்ணெய் விலை 40% விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க வெளியுறவுத்துறை இணைஅமைச்சர் வென்டி ஷெர்மேன் நேற்று அளித்த பேட்டியில், “ உக்ரைனை அழிக்கும் நோக்கில் ரஷ்யா இருந்தாலும்,  பேச்சுவார்த்தைக்கு செல்லத் தயாராக இருப்பதாக ரஷ்யாவின் செயல்பாடுகள் காண்பிக்கின்றன”எனத் தெரிவித்தார்.
இதனால் வரும் நாட்களில் உக்ரைன் ,ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை சுமூகமாகச் செல்லும் அறிகுறிகள் காணப்படுகிறது. 

கடந்தவாரம்

கடந்த வாரத்தில் பிரன்ட் கச்சா எண்ணெய்விலை 4.8 சதவீதமும், வெஸ்ட் டெக்சாஸ் எண்ணெய் விலை 5.7% சரிந்தது. கடந்த 2008ம் ஆண்டுக்குப்பின் கடந்த வாரத்தில் கச்சா எண்ணெய் விலை உச்சத்தை எட்டியது. ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்ததால், முதலீட்டாளர்கள் அச்சமடைந்தால் சந்தையில் அதிகமாக வாங்கத் தொடங்கியதால் விலை எகிறியது.ஒபேக் நாடுகளின் தலையீட்டுக்குப்பின் விலை குறையத் தொடங்கியுள்ளது.

crude oil price: Oil prices slide by about $4 per barrel

ஐரோப்பியா, அமெரிக்காவுக்கு பிராதானமாக ரஷ்யாவிலிருந்துதான் கச்சா எண்ணெய்,எரிவாயு சப்ளை செய்யப்பட்டு வந்தது. ரஷ்யாவிலிருந்து தினசரி 70 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது, உலக சப்ளையில் 7% ரஷ்யாவசம் இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

விலை உயர்வு ஒத்திவைக்கப்படுமா

crude oil price: Oil prices slide by about $4 per barrel

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்விலை படிப்படியாக இறங்கி வருவதால், இந்தியாவில் பெட்ரோல், டீசல்விலை உயர்வு ஒத்திவைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. பொதுவார சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் 2வார சராசரி அடிப்படையில்தான் எண்ணெய் நிறுவனங்கள் விலையை நிர்ணயிக்கின்றன. ஒருவேளை இந்தவாரத்திலும் கச்சா எண்ணெய்விலை தொடர்ந்து சரியும் பட்சத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு தள்ளிப்போகும் வாய்ப்புள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்

Follow Us:
Download App:
  • android
  • ios