credit card : கிரெடிட் கார்டுகளுக்கான புதிய விதிகள் அமலாவது ஒத்திவைப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
RBI Extends Deadline to Implement New credit card rules: கிரெடிட் கார்டுகளுக்கான புதிய விதிகள் ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக இருந்தநிலையில் பல்வேறு நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று அக்டோபர்மாதம் நடைமுறைப்படுத்தப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கிரெடிட் கார்டுகளுக்கான புதிய விதிகள் ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக இருந்தநிலையில் பல்வேறு நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று அக்டோபர்மாதம் நடைமுறைப்படுத்தப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள்
ஒரு வங்கி அல்லது நிறுவனம் வாடிக்கையாளர் ஒருவருக்கு கிரெடிட் கார்டை வழங்கியபின் 30 நாட்களுக்குள் அவர் அதை ஆக்டிவேட் செய்யாவிட்டால், வங்கிகள் அல்லது கார்டு வழங்கிய நிறுவனம் பயனாளியிடம் இருந்து ஓடிபி பெற்று பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
வாடிக்கையாளர் கிரெடிட் கார்டை ஆக்டிவேட் செய்ய அனுமதியளிக்காவிட்டால், அந்த கார்டை எந்தவிதமான கூடுதல் கட்டணம் இன்றி அடுத்த 7 நாட்களுக்குள் கார்டை திரும்பப்பெற வேண்டும்.
கிரெடிட் கார்டின் பணத்தின் வரம்பை உயர்த்தும்முன், வாடிக்கையாளரிடம் அனுமதி பெற்று உயர்த்த வேண்டும். கார்டு உரிமையாளரின் சம்மதம் இன்றி அளவை உயர்த்தக்கூடாது.
கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையை செலுத்துவதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், செலுத்த வேண்டிய குறைந்தபட்ச தொகை உட்பட அனைத்தையும் தெளிவாக வாடிக்கையாளருக்கு தெரிவிக்க வேண்டும்.
மேலும், கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்கள், வாடிக்கையாளரிடம் இருந்து பில்லிங் வசூலிப்பது மற்றும் கிரெடிட் கார்டை முடக்குவது குறித்தும் தெளிவான வழிமுறைகள் தரப்பட்டுள்ளன. இந்த வழிமுறை ஒவ்வொரு வங்கிக்கும், பேமெண்ட் வங்கிக்கும், மாவட்ட அளவிலான கூட்டுறவு வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள், வங்கிசாராத நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
கிரிடெட் கார்டு பில்லிங் தேதி முந்தைய மாதத்தின் 11ம்தேதி தொடங்கி, நடப்பு மாதத்தின் 10ம் தேதி முடிய வேண்டும். ஒவ்வொரு மாதத்தின் 10ம் தேதி கிரெடிட் கார்டு ஸ்டேட்மென்ட் உருவாக்கப்படும். கிரெடிட் கார்டுக்கு பில் செலுத்துவதில் எந்தவிதமான தாமதமும் இருக்கக் கூடாது. கார்டு வழங்குவோர், கிரெடிட் கார்டுக்கான கட்டணங்களை வாடிக்கையாளருக்கு முறையாக மின்அஞ்சல் மூலம்தெரிவிக்க வேண்டும். வாடிக்கையாளர் பணத்தை செலுத்துவதற்கு 14 நாட்கள்வரை அவகாசம் அளிக்க வேண்டும். அதன்பின்புதான் வட்டி வசூலிக்க வேண்டும்.
இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது
இ்ந்த புதிய விதிகள் அனைத்தும் ஜூலை 1ம் தேதி அமலுக்கு வருவதாக இருந்தது. ஆனால், வங்கிகள், நிறுவனங்கள் கோரிக்கையை ஏற்று அக்டோபர் மாதம் முதல் அமலாகிறது