covid insurance :கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் பிரதான் மந்திரி கரீப் கல்யான் திட்டம் அல்லது காப்பீடு திட்டம் இன்று முதல் மேலும் 180 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் பிரதான் மந்திரி கரீப் கல்யான் திட்டம் அல்லது காப்பீடு திட்டம் இன்று முதல் மேலும் 180 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பணி
கொரோனா முதல் அலையின்போது கொரோனா நோயாளிகளை கையாளும் பணியில் இருக்கும் செவிலியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ, சுகாதாரப் பணியாளர்கள் திடீரென உயிரிழப்பைச் சந்தித்தால் அவர்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீடு தரும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
பிரதான் மந்திரி கரீப் கல்யான் திட்டத்தின் வழங்கப்பட்ட இந்த காப்பீடு திட்டம் 2020ம் ஆண்டு மார்ச் 30ம் தேதி 22 லட்சம் மருத்துவ, சுகாதாரப் பணியாளர்களுக்காக கொண்டுவரப்பட்டது. இவர்களுக்கு காப்பீடாக ரூ.1.70 லட்சம் கோடியை மத்திய அரசு அறிவித்தது.

ரூ.50 லட்சம் இழப்பீடு
இந்தத் திட்டத்தில் வார்ட் உதவியாளர்கள், ஆஷா பணியாளர்கள், பாராமெடிக்கல் பிரிவினர், தொழில்நுட்ப பணியாளர்கள், மருத்துவர்கள், சிறப்பு மருத்துவர்கள், தனியார் மருத்துவமனை ஊழியர்கள்,ஓய்வு பெற்ற ஊழியர்கள், தன்னார்வலர்கள், தினக்கூலிக்கு செய்வோர், வெளிப்பணி ஒப்படைப்பில் உள்ளவர்கள், மத்திய அரசு, மாநில அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவோர், எய்ம்ஸ், ஐஎன்ஐ ஆகியவற்றில் ப ணியாற்றுவோருக்கும் இந்த காப்பீடு திட்டம் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் பிரதான் மந்திரி கரீப் கல்யான் திட்டம் கூடுதலாக 180 நாட்களுக்காக மருத்துவப் பணியாளர்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசுஅறிவித்துள்ளது.
![]()
180 நாட்களுக்கு நீட்டிப்பு
மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் “ கோவிட் தடுப்பு பணியில் இருக்கும் மருத்துவ சுகாதாரப் பணியாளர்களுக்கான காப்பீடு திட்டம், அதாவது, பிரதான் மந்திரி கரீப் கல்யான் திட்டம் மேலும் 180 நாட்களுக்கு இன்று(19ம்தேதி) முதல் நீட்டிக்கப்படுகிறது.
இந்த திட்டம் அறிமுகம் செய்ததில் இருந்து இதுவரை 1,905 சுதாகாரப் பணியாளர்கள் கொரோனா பணியில் இருந்து இறந்ததற்காக இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.