முன்னணி செல்போன் நிறுவனமாக உயர்ந்து வந்த செல்போன் நிறுவனம் ஒன்று அதன் உரிமையாளரின் சூதாட்ட மோகத்தால் திவாலாகி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. 

சீனாவின் பிரபல மொபைல் நிறுவனம் ஜியோனி. குறைந்த விலை உட்பட ஏராளமான ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகம் செய்து, ஆசிய சந்தைகளில் அசத்தியது. சில ஆண்டுகளாக இந்நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி, திக்குமுக்காடி வந்த இந்த நிறுவனம் இப்போது திவாலாகி விட்டது. ஆகஸ்ட் 2018 வரை அந்நிறுவனத்திற்கு 20.2 பில்லியன் யுவான் கடன் இருப்பதாக கூறப்படுகிறது. ஜியோனி நிறுவனத்தின் நிறுவனர் லியூ லிராங், ‘ஜியோனி நிறுவனம், 2013-15ம் ஆண்டு காலக்கட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 14.4 மில்லியன் டாலர் நஷ்டத்தை சந்தித்து’ எனக் கூறுகிறார்.  

சமீபத்தில் ஸ்பெயின் சென்றிருந்த லியூ, அங்கு சூதாட்டத்தில் மட்டும் 10 பில்லியன் யுவானை இழந்து விட்டாராம். இதனால் சப்ளையர்களுக்கு தர வேண்டிய தொகை கொடுக்காமல் அப்படியே நின்று போய்விட்டது. கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களுக்கு தர வேண்டிய பணத்தை கேட்டு ஜியோனி நிறுவனத்தை முறையிட்டு வருகின்றனர். 

இந்நிலையில் ஜியோனி நிறுவனம் திவாலானதாக அறிவிக்கக் கோரி அங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அதனை ஏறு நீதிமன்றமும் திவாலானதாக அறிவித்து விட்டது. ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஜியோனி நிறுவனம், இந்தியாவில் ரூ.650 கோடி முதலீடு செய்ய இருந்தது. அப்படியான சூழலில், அந்நிறுவனம் திவாலாவது இந்திய சந்தைகளையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. லியூ லிராங்கின் சூதாட்ட மோகத்தால் ஜியோனி நிறுவனமே திவலாகிவிட்டதால் ஜியோனி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர்.