Asianet News TamilAsianet News Tamil

cheque bounce : 33 லட்சம் செக் பவுன்ஸ் வழக்குகள்: 25 சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கிறது உச்ச நீதிமன்றம்

cheque bounce case: நாடுமுழுவதும் செக் பவுன்ஸ் வழக்குகள் லட்சக்கணக்கில் தேங்கியுள்ள நிலையில், அதை விரைந்து விசாரிக்க 5 மாநிலங்களில் 25சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

cheque bounce : Supreme Court to set up 25 special courts to study 33 lakh pending cheque bounce cases
Author
New Delhi, First Published May 21, 2022, 11:20 AM IST

நாடுமுழுவதும் செக் பவுன்ஸ் வழக்குகள் லட்சக்கணக்கில் தேங்கியுள்ள நிலையில், அதை விரைந்து விசாரிக்க 5 மாநிலங்களில் 25சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 25 சிறப்பு நீதிமன்றங்களை ஓய்வுபெற்ற நீதிமன்ற அதிகாரிகள் மூலம் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த அதிகாரிகள் செக் பவுன்ஸ் வழக்குகளை மட்டும் விசாரித்து தீர்வு காண்பார்கள். 

cheque bounce : Supreme Court to set up 25 special courts to study 33 lakh pending cheque bounce cases

நாடுமுழுவதும் செக் மோசடி, செக் பவுன்ஸ் எனப்படும் வங்கிக்கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி வருதல் போன்ற வழக்குகள் அதிகரித்து வருகின்றன. இதில் 33 லட்சம் செக் பவுன்ஸ் வழக்குகள் மட்டும் நிலுவையில்உள்ளன. இது குறித்து 2020ம் ஆண்டு மார்ச் 5ம்தேதி தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் வழக்காக எடுத்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பிஆர் காவே, ரவீந்திர பாட் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.

இந்த வழக்கில் நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பிஆர் காவே, ரவீந்திர பாட் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அதில் “ செக் பவுன்ஸ் வழக்குகள் அதிகமாக இருக்கும் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, உத்தரப்பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் 25 சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும். 

இந்த நீதிமன்றங்களுக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள், நீதிமன்ற அதிகாரிகள் நியமிக்கப்பட்டு செக் பவுன்ஸ் வழக்குகள் விரைந்து தீர்வுகாணப்படும். இது பரிசோதனை முயற்சிதான். இந்த முயற்சி 2022, செப்டம்பர் 1ம் தேதி முதல் 2023, ஆகஸ்ட் 31ம் தேதி வரை நடக்கும். செப்டம்பர் 1ம் தேதி முதல் சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படும்.

cheque bounce : Supreme Court to set up 25 special courts to study 33 lakh pending cheque bounce cases

ஒரு சிறப்பு நீதிமன்றம் என்பது 5 நீதிமன்ற மாவட்டங்களில் உள்ள செக் பவுன்ஸ் வழக்குகளை விசாரிக்கும் வகையில்இருக்கும். இந்த 5 நீதிமன்ற மாவட்டங்களும் அதிகமான செக் பவுன்ஸ் வழக்குகள் இருக்கும் மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டு விசாரி்க்கப்படும்.

இந்த பரிசோதனையில் கிடைக்கும் முடிவின் அடிப்படையில் இதேபோன்ற சிறப்பு நீதிமன்றம் நாடுமுழுவதும் அமைக்கப்படுவது குறித்த சாத்தியங்கள் ஆய்வு செய்யப்படும். 

இந்த சிறப்பு நீதிமன்றங்களுக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள், நீதிமன்ற அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் நியமிக்கப்படுவார்கள். இவர்கள் அனைவரும்கடந்த 5 ஆண்டுகளுக்குள் ஓய்வு பெற்றவர்களாக இருக்க வேண்டும். இந்த நீதிமன்றங்களில் காலியிடம், தேவையான ஊழியர்கள் குறித்து அந்தந்த மாநில உயர் நீதிமன்றம் கவனத்தில் கொண்டு நிரப்ப வேண்டும்.

cheque bounce : Supreme Court to set up 25 special courts to study 33 lakh pending cheque bounce cases

இந்த சிறப்பு நீதிமன்றங்கள், செக் பவுன்ஸ் வழக்கில் சம்மன்அனுப்பியும் ஆஜராகாத, வழக்கறிஞர்கள் மட்டும் ஆஜராகிய வழக்குகள் விசாரிக்கப்படும். நீண்டகாலம் நிலுவையில் இருக்கும் வழக்குகளை அடையாளம் கண்டு, சம்மன்அனுப்பி விசாரிக்கப்பட வேண்டும். முதலில் நீண்டகால வழக்குகள் அடையாள் காணப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும். வழக்குகளை தொடர்ந்து ஒத்திவைக்காமல் விரைந்து தீர்க்க வேண்டும்.” இவ்வாறு நீதிபதிகள்  உத்தரவில் தெரிவித்தனர்

Follow Us:
Download App:
  • android
  • ios