TATASONS:டாடா குழுமத்தின் தலைவராக சந்திரசேகரன்: 2-வதுமுறையாக நியமிக்க இதுதான் காரணம்

டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக நாமக்கல்லைச் சேர்ந்த என் சந்திரசேகரன்(வயது58) 2-வது முறையாக, அடுத்த 5ஆண்டுகளுக்கு ஒருமனதாக நியமிக்கப்பட்டதற்கு காரணங்கள் வெளியாகியுள்ளன.

Chandrasekarans term as Tata Sons chairman  for another 5 years

டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக நாமக்கல்லைச் சேர்ந்த என் சந்திரசேகரன்(வயது58) 2-வது முறையாக, அடுத்த 5ஆண்டுகளுக்கு ஒருமனதாக நியமிக்கப்பட்டதற்கு காரணங்கள் வெளியாகியுள்ளன.

2012ல் டாடா சன்ஸ் குழுமத் தலைவராக நியமிக்கப்பட்ட சைரஸ் மிஸ்திரி நீ்க்கப்பட்டதைதத் தொடர்ந்து, புதிய தலைவராக கடந்த 2016ம் ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார்.

Chandrasekarans term as Tata Sons chairman  for another 5 years

டிசிஎஸ் வாழ்க்கை

கடந்த 1987-ம் ஆண்டு டிசிஎஸ் நிறுவனத்தில் கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும்போதே சந்திரசேகரன் சேர்ந்துவிட்டார். ஏறக்குறைய 30ஆண்டுகள் டிசிஎஸ் நிறுவனத்தில் அதன் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர்.

2009ம் ஆண்டு  டிசிஎஸ் நிறுவனத்தின் சிஇஓவாக சந்திரசேகரன் பொறுப்பேற்றார். அதன்பி்ன் அவர் பதவி விலகியபோது, தான் பதவி ஏற்றபோது இருந்த வருமானதைவிட 3 மடங்கு உயர்த்திக்காட்டினார். சந்திரசேகரனின் தலைமையின் கீழ் டிசிஎஸ் நிறுவனம் ஆண்டுக்கு சராசரியாக 14 முதல் 16 % வளர்ச்சி அடைந்தது.  அதாவது, 2015-16ம் நிதியாண்டில் டிசிஎஸ் நிறுவனம் ரூ.1.10 லட்சம் கோடி வருவாய்ஈட்டியது. நாட்டின் மதிப்பு மிக்க நிறுவனமாக டிசிஎஸ் உயரசந்திரசேகரன் முக்கியக் காரணம்.

Chandrasekarans term as Tata Sons chairman  for another 5 years

டாடா சன்ஸ்

அதன்பின் கடந்த 2016ம் ஆண்டு டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக என்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டு சிறப்பாகப் பணியாற்றினார். கடந்த 5ஆண்டுகளில் டாடா சன்ஸ் குழுமம் பல்வேறு பிரிவுகளில் நன்கு வளர்ச்சி பெற்றது, சந்திரசேகரன் நிர்வாகத்திறமைகுறித்து வாரியக்குழு நிர்வாகிகள் அனைவருக்கும் மனநிறைவு இருந்ததாகத் தகவல் வெளியானது. 

இந்நிலையில் இன்று நடந்த டாடா சன்ஸ் நிர்வாகக்குழு கூட்டத்தில், 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான சந்தை மதிப்பு கொண்ட டாடா சன்ஸ் தலைவராக 2-வது முறையாக சந்திரசேகரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

என்ன காரணம்

சந்திரசேகரன் பதவிக்காலத்தில் டாடா சன்ஸ் குழுமத்தில் ஏராளமான நிர்வாகச் சீர்திருத்தங்கள், நிறுவன இணைப்புகள், ஒருங்கிணைத்தல் நடந்தன. குறிப்பாக ஸ்டீல், விமானப் போக்குவரத்து, டிஜிட்டல் பிரிவு ஆகியவற்றில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன.

Chandrasekarans term as Tata Sons chairman  for another 5 years

துணிச்சல்  முடிவு

குறிப்பாக செல்போன் பிரிவிலிருந்து டாடா டெலிசேவை வெளியேறியது. ஏறக்குறைய ரூ.60ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டபோதிலும் துணிச்சலாக டாடா  செல்போன் நிறுவனத்தை கைவிட்டு, அதை பார்தி ஏர்டெல் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஏஜிஆர் நிலுவைக் கட்டணத்தை எந்தவிதமான நிலுவை இல்லாமல் டாடா நிறுவனம் செலுத்தியது.

பூஷான் ஸ்டீல்

அடுத்ததாக, பூஷான் ஸ்டீல் நிறுவனத்தை கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் ரூ.35,200 கோடிக்கு டாடா ஸ்டீல் நிறுவனம்வாங்கியது, சந்திரசேகர் நிர்வாகத்தில் மிகப்பெரிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. பூஷான் ஸ்டீல் நிறுவனம் கடன் பிரச்சினையாலும், திவால் சூழலிலும் இருந்தபோது, அந்தநிறுவனத்தை வாங்கியதோடு மட்டுமல்லாமல், பெரிய நன்மதிப்பையும் சந்திரசேகரன் பெற்றார். அதன்பின், டாடா பிஎஸ்எல் என்ற பெயருடன் தற்போது இயங்கி வருகிறது

Chandrasekarans term as Tata Sons chairman  for another 5 years

மேலும், ஐரோப்பிய வர்த்தகத்தை  தைசீன் குரூப் நிறுவனத்திடம் விற்பனை செய்ய சந்திரசேகர் தலைமையில் டாடா நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளாக முயன்றது ஆனால், அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை. 

மீண்டும் வந்த ஏர் இந்தியா

சந்திரசேகர் நிர்வாகத்திறமையில் முத்தாய்ப்பாகஇருப்பது 71 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் ஏர் இந்தியா நிறுவனத்தை கையகப்படுத்தியதுதான். ரூ.18ஆயிரம் கோடிக்கு மத்தியஅரசிடம் இருந்து டாடா சன்ஸ் குழுமம் வாங்கியது, இழந்த மிகப்பெரிய கவுரவத்தை மீ்ட்டுக்கொடுத்தது போன்ற திருப்தியை நிர்வாகிகளுக்கு உண்டாக்கியது. டாடாவிடம் எஸ்ஐஏ ஏர்லைன்ஸ், ஏர் ஏசியா எனஇரு விமானநிறுவனங்கள்இருந்தபோதிலும், ஏர் இந்தியா நிறுவனத்தை தனது நிர்வாகத்திறமையால் வாங்கி சந்திரசேகரன் தன்னை நிரூபித்தார். இந்த கையப்படுத்துதல் மூலம் ஏர் லைன் வர்த்தகத்தில் டாடாவின் சதவீதம் 25 ஆகஉயரும்

Chandrasekarans term as Tata Sons chairman  for another 5 years

கடந்த ஆண்டு டிஜிட்டல் டொமைனில், சூப்பர் ஆப் என்ற செயலியை விலைக்கு டாடா நிறுவனம் வாங்கியதும் சந்திசேகரன் நிர்வாகத்தில் சிறப்பாக வர்ணிக்கப்படுகிறது. அந்த செயலி மூலம் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விமானடிக்கெட்டுகளை விற்பனை செய்ய முடியும். 

அமேசான், ரிலையன்ஸுடன் போட்டி

2021, மே மாதம், பிக் பாஸ்கெட் நிறுவனத்தையும் டாடா சன்ஸ் குழுமம் ரூ.9,500 கோடிக்கு விலைக்குவாங்கியது. இதன் மூலம் அமெரிக்க சில்லரை வர்த்தக நிறுவனமான அமேசான், வால்மார்ட்டின் ஃபிலிப்கார்ட், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனங்களுடன் நேரடியாக களத்தில் இறங்கத் தயாரானது.

Chandrasekarans term as Tata Sons chairman  for another 5 years

சந்திரசேகரன் தான் பதவிஏற்ற காலத்திலிருந்து கடந்த 5ஆண்டுகளாக பல்வேறு நிறுவனங்களை டாடா சன்ஸ் குழுமத்துடன் இணைத்து அதன் சந்தைதமதிப்பையும், சொத்துமதிப்பையும் அதிகப்படுத்தியுள்ளார். அவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் தவறானதாக இருக்காது என்பதை அவரின் நிர்வாகத் திறமை நிர்வாகிகளுக்கும், நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கும் உறுதிப்படுத்தியது.

அந்த நம்பிக்கையே 2-வதுமுறையாக, அடுத்த 5 ஆண்டுகளுக்கு டாடா குழுமத்தை தனது தோளில் சுமக்க சந்திரசேகரன் தயாராகிவிட்டார்.


 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios