மருத்துவரின் மருந்துச்சீட்டு இல்லாமல் பாரசிட்டமால், ஆன்ட்டிஅலர்ஜிக், டைக்லோபினாக் உள்ளிட்ட 16 வகை மாத்திரைகளை மருந்துக்கடைகளில் மக்கள் வாங்கும் வகையில் சட்டத் திருத்தத்தை மத்திய அ ரசு கொண்டுவருகிறது.

மருத்துவரின் மருந்துச்சீட்டு இல்லாமல் பாரசிட்டமால், ஆன்ட்டிஅலர்ஜிக், டைக்லோபினாக் உள்ளிட்ட 16 வகை மாத்திரைகளை மருந்துக்கடைகளில் மக்கள் வாங்கும் வகையில் சட்டத் திருத்தத்தை மத்திய அ ரசு கொண்டுவருகிறது.

இதற்கான வரைவு சட்டமசோதாவை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்த 16 வகை மருந்துகளை மக்கள் எந்தவிதமான மருத்துவரின் பரிந்துரையும் இல்லாமல் வாங்கி பயன் பெற முடியும். மருந்துக் கடைக்காரர்களும் இந்த 16 வகை மருந்துகளை விற்பனை செய்ய மருத்துவரின் பரிந்துரைச்சீட்டு கேட்கத் தேவையில்லை
1945, சுகாதாரச்சட்டவிதிகளில் மாற்றம் கொண்டுவருவது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பானையை வெளியிட்டுள்ளது பட்டியல் கே பிரிவில் இந்த 16 வகை மருந்துகளை விற்க அனுமதி வழங்கப்பட உள்ளது.

இந்த 16 வகை மருந்துகளில் பாரசிட்டமால், டிஸ்இன்பெக்ட் மாத்திரைகள், இருமலுக்கு சாப்பிடும் டெக்ஸ்ட்ரோமெத்தோர்பன் ஹைட்ரோப்ரோமைட் லோஜன்சஸ் மருந்துகள்,ஆன்ட்டி பாக்டீரியல், ஆன்ட்டி பங்கள் க்ரீம், நாசல் டீகன்ஜசன்ஸ், அலர்ஜி மருந்துகள் உள்ளிட்டவை இந்தப் பட்டியலி்ல் உள்ளன.

இந்தச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற்பட்டுவிட்டால், இந்த 16 வகை மருந்துகளையும் மக்கள் மருந்துவரின்பரிந்துரைச் சீட்டு இன்று மருத்துக்கடைகளில் வாங்கலாம். மருந்துக்கடைக்காரர்களும், இந்த 16 வகை மருந்துகளைப் பயமின்றி விற்கலாம்.

இதில் முக்கியமாக இந்த மருந்துகளை வாங்கிப் பயன்படுத்தும் மக்கள் 5 நாட்களுக்குள் நோய் குணமடைந்தால் சிறப்பு. ஒருவேளை 5 நாட்களுக்கு மேலும் குணமடையாமல் இருந்தால், மருத்துவரை அணுக வேண்டும்.
இந்த வரைவு மசோதா குறித்து மக்கள் தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் தெரிவிக்கலாம்.