Women : பெண் வியாபாரிகளுக்கு 3 லட்சம்.. மத்திய அரசின் அசத்தல் திட்டம்.. என்ன அது? எப்படி சேர்வது? முழு விவரம்!

Central Government Scheme : பெண்களுக்கென்று பிரத்தியேகமாக மத்திய அரசின் பல நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பதிவிலும் அப்படிப்பட்ட ஒரு திட்டத்தை குறித்து காணலாம்.

Central Government Scheme for economically weak women to Start business see details ans

மத்திய அரசை பொருத்தவரை சேமிப்பு திட்டங்கள், பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டங்கள், முதியோருக்கான பென்ஷன் திட்டம் என்று பல வகையான சேமிப்பு திட்டங்களையும், இதர பல திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது. இந்நிலையில் ஏழை பெண் வியாபாரிகளுக்காக மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஒரு திட்டம் குறித்து இந்த பதிவில் காணலாம். 

பணியாளர் திட்டம் 

இந்தத் திட்டத்தின் பெயரானது பணியாளர் திட்டமாகும், மத்திய அரசின் மகளிர் மேம்பாட்டு கழகத்தின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஏழை பெண் வியாபாரிகளுக்கு மத்திய அரசு நேரடியாக பணம் வழங்கி உதவுகிறது. ஏழை எளிய பெண்கள் மத்திய அரசு கொடுக்கும் பணத்தை முதலீடு செய்து, வியாபாரம் செய்து தங்களுடைய வாழ்வின் தரத்தை உயர்த்திக் கொள்வதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். 

Anant : காதல் கடிதம் தீட்டிய ஆனந்த் அம்பானி.. உடலில் போர்த்தி அழகு பார்த்த ராதிகா மெர்ச்சண்ட் - சுவாரசிய தகவல்

கிராமப்புற பெண்களுக்கு முன்னுரிமை 

இந்த திட்டத்தைப் பொறுத்தவரை நகர்புறத்தில் வசிக்கும் பெண்களை விட அதிக அளவில் கிராமத்தில் வசிக்கும் பெண்களே பயனுறும் வண்ணம் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதே நேரம் இந்த பணத்தை மத்திய அரசு இலவசமாக தருவதில்லை என்பதையும் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும், வட்டி இல்லாத ஒரு கடனாக மட்டுமே ஏழை எளிய பெண் வியாபாரிகளுக்கு மத்திய அரசு இந்த பணத்தை வழங்குகிறது. 

என்ன தகுதி வேண்டும்?

இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற அந்த குடும்பத்தின் வருமானம் வருடத்திற்கு 1.5 லட்சம் அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும். ஒற்றைப் பெண்கள் மற்றும் ஊனமுற்ற பெண்களுக்கு அதிக முன்னுரிமை இந்த திட்டத்தில் அளிக்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் இணையும் பெண்களின் வயது 18 முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். 

ஏழை எளிய பெண்கள் தங்களுக்கு என எந்த ஒரு வியாபாரத்தை தொடங்கவும் இந்த கடனுக்கு தகுதி உடையவர்கள் ஆகின்றனர். அதேபோல இந்த கடனை பெண்கள் வங்கியில் உரிய காலத்தில் அதை திருப்பி செலுத்தியிருக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் பணத்தை பெற ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், பிறப்புச் சான்றிதழ், முகவரி சான்று, வருமானச் சான்றிதழ், ரேஷன் கார்டு, பிபிஎல் கார்ட், வங்கி பாஸ்புக் நகல் ஆகியவை இருந்தால் போதும். இந்த திட்டத்தை அமல்படுத்தும் வங்கிகளில் உரிய ஆவணங்களை அழித்து உரிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இந்த கடனை பெற்றுக் கொள்ளலாம்.

250 ரூபாய் இருந்தாலே விமானத்தில் பயணிக்கலாம்.. மலிவு விலை பிளைட் டிக்கெட்டை வாங்குவது எப்படி?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios