NSE Scam : தேசியப் பகுச்சந்தையில் நடந்த கோ-லொகேஷன் ஊழல் வழக்கில் ஏற்கெனவே அதன் முன்னாள் தலைமைநிர்வாக அதிகாரி சித்ரா ராமகிருஷ்மா, ஆனந்த் சுப்பிரமணியம் கைது செ்யயப்பட்டநிலையில், பிரபல கல்வியாளர் ஒருவரிடம் சிபிஐ விசாரணை நடத்து வருகிறது.

தேசியப் பகுச்சந்தையில் நடந்த கோ-லொகேஷன் ஊழல் வழக்கில் ஏற்கெனவே அதன் முன்னாள் தலைமைநிர்வாக அதிகாரி சித்ரா ராமகிருஷ்மா, ஆனந்த் சுப்பிரமணியம் கைது செ்யயப்பட்டநிலையில், பிரபல கல்வியாளர் ஒருவரிடம் சிபிஐ விசாரணை நடத்து வருகிறது.

கோ-லொகேஷன் ஊழல்

தேசியப் பங்குச் சந்தையில் கடந்த 2013 முதல் 2016ம் ஆண்டுவரை தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தவர் சித்ரா ராமகிருஷ்ணா. இவரின் பதவிக்காலத்தில் என்எஸ்இ சர்வர்கள் வைத்திருக்கும் இடத்தில் குறிப்பிட்ட சில பங்கு தரகர்கள், நிறுவனங்களின் சர்வர்களை வைத்து, பங்குவிலை விவரங்களை விரைவாகப் பகிர்வதற்கு உதவினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

ஆனந்த் சுப்பிரமணியம்

இது தொடர்பாக கடந்த 2018ம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தது. இதற்கிடையே என்எஸ்இ ரகசிய தகவல்களை பகிர்ந்த விவகாரத்தில் சித்ரா இல்லத்தில் கடந்த மாதம் சிபிஐ ரெய்டு நடத்தி, அவரிடம் விசாரணையும் நடத்தியது. ஆனால், அவர் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. இந்த வழக்கில் , சித்ராவின் ஆலோசகராக இருந்த ஆனந்த் சுப்பிரமணியத்தை சிபிஐ அதிகாரிகள் கடந்த வாரம் கைது செய்தனர்.

சித்ரா கைது

இதைத்தொடர்ந்து சித்ரா தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை தள்ளுபடி செய்ததையடுத்து, ஞாயிற்றுக்கிழமை இரவு சித்ரா கைது செய்யப்பட்டார். அவரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அனுமதிவழங்கியுள்ளது.

முக்கிய நபர்

இற்கிடையே கோ-லொகேஷன் மற்றும் புள்ளிவிவரங்களை வழங்கிய வழக்கில் பிரபல கல்வியாளர் அஜெய் நரோட்டம் ஷா என்பவர் மீதும் புகார்எழுந்தது. கடந்த 2018ம் ஆண்டு சிபிஐ பதிவு செய்த முதல் தகவல்அறிக்கையிலும் அஜெய் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. 
இப்போது கோ-லொகேஷன் விவாரம் சூடுபிடித்துள்ளதையடுத்து, அஜெய் நரோட்டம் ஷாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யார் இந்த அஜெய் ஷா

மும்பை ஐஐடி கல்வி நிறுவனத்தில் எம்பிஏ முடித்த அஜெய் நரோட்டம் ஷா, லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். அதன்பின் மத்திய நிதிஅமைச்சகத்துக்கு ஆலோசகராகவும், இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையத்திலும் அஜெய் பணியாற்றியுள்ளார். மேலும், இந்தியா காந்தி, மேம்பாட்டு ஆராய்ச்சி மையத்திலும் அஜெய் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சானக்கியா மென்பொருள் 
சித்ரா ராமகிருஷ்ணனிடம் சிபிஐ நடத்திய விசாரணை குறித்து வட்டாரங்கள் கூறுகையில், “ என்எஸ்இ குறித்த ரகசிய தகவல்களை, இன்போடெக் பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்திடமும்,அஜெய் நரோட்டம் ஷாவிடம் வழங்கியதாகத் தெரிவித்துள்ளார். இந்த இன்போடெக் நிறுவனம்தான் பங்குதரகர்களுக்கு தேவையான மென்பொருளை வழங்கியுள்ளது. அஜெய் ஷாவின் மைத்துனி சுனிதா தாமஸ்தான் இன்போடெக் நிறுவனத்தின் இயக்குநர். இதனால்தான் அஜெய் சானக்கியா எனும் மென்பொருளை தயாரித்து, அதை குறிப்பிட்ட சில பங்குதரகர்களுக்கு வழங்கி விவரங்களை வேகமாகப் பெற உதவியுள்ளார். விரைவில் அஜெய் நரோட்டம் ஷாவும் கைது செய்யப்படுவார்” என தெரிவித்தன