Bureau of Indian Standards Act comes into force from October 12 Government

திருத்தப்பட்டு பல அம்சங்கள் சேர்க்கப்பட்ட, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய தர ஆணையச் சட்டம் (பி.ஐ.எஸ்.) கடந்த 12-ந்ேததி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதிய அம்சங்களுடன் வந்துள்ள இந்த சட்டத்தின் கீழ் தங்க நகைகள் உள்ளிட்ட அதிகமான பொருட்கள், சேவைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த வகை பொருட்கள் பி.ஐ.எஸ் சட்டத்தில் கீழ் தரமானதாக இருப்பது அவசியமாகும்.

1986ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ‘பி.ஐ.எஸ்’ சட்டம் மாற்றப்பட்டு அதற்கு பதிலாக புதிய இந்திய தர அமைப்புச் சட்டம் கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இந்த சட்டத்தில் உள்ள விதிமுறைகள் அனைத்தையும் இறுதி செய்து, இந்த வாரத்தில் நடைமுறைக்கு வந்துள்ளதாக மத்திய நுகர்வோர் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது-

இந்த புதிய இந்திய தரச்சட்டம் நாட்டில் இன்னும் எளிதாக தொழில் செய்ய உதவும். ேமக் இன் இந்தியா பிரசாரத்துக்கு மட்டுமல்லாது, தரமான பொருட்கள், சேவைகள் நுகர்வோர்களுக்கு கிடைக்க இந்த சட்டம் உதவும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய சட்டத்தின்படி, எந்தவிதமான பொருட்கள், சேவைகளை நுகர்வோருக்கு அளித்தாலும், அதில் கண்டிப்பாக இந்திய தரச் சான்றிதழ் அவசியம் இடம் பெற வேண்டும். இது நுகர்வோர் நலன், விலங்குகள், மரங்கள், இயற்கை நலன், நியாயமற்ற வர்த்தகம் செய்யக்கூடாது, தேசிய பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

மேலும், விலை உயர்ந்த பொருட்களான தங்க நகைகள், வைர நகைகள் ஆகியவற்றில் ‘பி.ஐ.எஸ்.’ முத்திரை கண்டிப்பாக இடம் பெற வேண்டும்.

பொருட்கள் மற்றும் சேவைகள் இந்திய தர அமைப்புச் சட்டத்தின் படி நுகர்வோர்களுக்கு வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க மத்திய அரசு தனி அதிகாரிகளையும், அமைப்பும் அமைக்க உள்ளது.