BSNL-BBNL: பாரத் பிராண்ட்பேண்ட் நிகம் லிமிடட் நிறுவனத்தை பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாரத் பிராண்ட்பேண்ட் நிகம் லிமிடட் நிறுவனத்தை பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இரு நிறுவனங்கள் இணைப்பு இந்த மாதத்தில் நடக்கலாம் என்று மத்தியஅரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இணைப்பு

அனைத்து இந்திய பொறியாளர்கள் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் கூட்டமைப்பின் சார்பில் கடந்த 13ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவர் பி.கே.புர்வார் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில் “ பிஎன்என்எல் நிறுவனத்துக்கு திருப்புமுனைக்கான ஒரு வாய்ப்பை மத்திய அரசு வழங்குகிறது.

அதாவது, பிபிஎன்எல் நிறுவனத்தை பிஎஸ்என்எல் நிறுவனத்தோடு இணைப்பது எனும் கொள்கை முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. இது தொடர்பாக ஒரு மணிநேரம் தொலைத்தொடர்பு அமைச்சர், அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்தேன். 

6.80 லட்சம் கி.மீ

தற்போது பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 6.80 லட்சம் கி.மீ அதிகமான கண்ணாடி இழைக் கேபிள் தடம் இருக்கிறது. பிபிஎன்எல் நிறுவனம் இணையும் போது, 5.67 லட்சம் கி.மீ கண்ணாடி இழை கேபிள் பாதை கூடுதலாக பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு கிடைக்கும். 1.85 லட்சம் கிராமப்பஞ்சாயத்துக்கு கேபிள் வசதி கிடைக்கும்.

பட்ஜெட்டில் கூடுதல்நிதி

ஆதலால் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனத்தை சுதந்திரமாகச் செயல்பட அனைத்து விதமான அனுமதியையும் மத்திய அரசு அளித்துள்ளது. பட்ஜெட்டில் ரூ.45ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ரூ.24 ஆயிரம் கோடிதான் ஒதுக்கப்பட்டது. ஆதாலால் இந்த வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்தி நிறுவனத்தை முன்னேற்ற வேண்டும்.

4ஜி சேவையை நடைமுறைக்குக் கொண்டுவரும் கடைசி கட்ட பரிசோதனையில் பிஎஸ்என்எல்இருக்கிறது. ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் முடித்து நடைமுறைக்கவர மத்திய அரசு எதிர்பார்க்கிறது. ஆனால், மே அல்லது ஜூன் மாதத்துக்குள் பிஎஸ்என்எல் 4ஜி சேவை நடைமுறைக்கு வந்துவிடும் என்று நம்புகிறேன்.

4ஜி சேவை

தொலைத்தொடர்பு துறையின் அடுத்தகட்ட வளர்ச்சி என்பது, வீ்ட்டுக்கு ஃபைபர் கேபிளில் பலவிதமான சேவைகளை வழங்குவதாகும். இதன்படி ஃபைபர் கேபிளில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறுவகையான சேவைகளை வழங்க, 1லட்சம் மொபைல் பேஸ் ஸ்டேஷன்கள் அமைக்கப்படும். இந்த வாய்ப்பை நாம் தவறவிட்டால், வேறு மாற்று வாய்ப்புஇல்லை. செய் அல்லது செத்துமடி என்ற ரீதியில்தான் மத்தியஅரசு செயல்படுகிறது. ஆதாலல், பிஎஸ்என்எல் சிறப்பாக செயல்பட வேண்டும். அரசின் மிகப்பெரிய சொத்தாக மாற வேண்டும். அதற்குரிய பொறுப்பு நம்மிடம் இருக்கிறது.

இவ்வாறு புர்வார் தெரிவித்தார்