கடந்த சில நாட்களாக சரிவை கண்ட இந்திய பங்குச்சந்தைகள் இன்று எழுச்சியுடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 95 புள்ளிகள் மற்றும் தேசிய பங்குச்சந்தை 51 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு பெற்றன. 

அக்டோபர் 20ம் தேதியான இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 95 புள்ளிகள் அதிகரித்து 59,202 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான NSE 51 புள்ளிகள் உயர்ந்து 17,563 புள்ளிகளுடன் நிறைவு பெற்றது. தேசிய பங்கு சந்தையில், யுபிஎல், அதானி குழுமம், டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் பெரும் உயர்வு கண்டன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred