அதிவேக ரெயிலின் முன் சிக்க இருந்த பைக்கர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய வீடியோ வைரலாகி வருகிறது.

மும்பையில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் அதிவேக ரெயில் மோதி இருசக்கர வாகனம் ஒன்று சுக்குநூறானது. ஓடும் ரெயிலின் முன் இருசக்கர வாகனம் எங்கிருந்து வந்தது என்பதை வைரல் வீடியோ தெளிவாக காட்டுகிறது. அதன்படி ரெயில் வரும் முன் தண்டவாளத்தை கடந்துவிடலாம் எனும் அசுர நம்பிக்கையில் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். 

பின் ரெயில் அதிவேகமாக வருவதை சுதாரித்து கொண்ட நபர் தண்டவாளத்திற்க முன் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிடுகிறார். எனினும், இருசக்கர வாகனம் அவர் கைநழுவி கீழே விழுகிறது. பின் அதனை எடுப்பதற்கு முன் ரெயில் மோட்டார்சைக்கிளை இழுத்துச் சென்றுவிட்டது. 

இதனிடையே ரெயிலில் தானும் சிக்கிவிடக் கூடாது என்பதால் துளியும் தாமதிக்காமல் அங்கிருந்து நகர்ந்து விடுகிறார். இதனால் இருசக்கர வாகனத்தில் வந்தவர் ரெயிலில் சிக்காமல் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். எனினும், அதிவேகமாக வந்த ரெயில் மோட்டார்சைக்கிளை சுக்குநூறாக பிளந்ததை அடுத்து அதன் பாகங்கள் இருசக்கர வாகனத்தில் வந்தவர் மட்டுமின்றி ரெயில்வே கிராசிங்கில் இருந்த மற்றவர்களுக்கும் காயம் ஏற்படுத்தும் வகையில் பறந்தது. 

Scroll to load tweet…

வீடியோவின் படி இருசக்கர வாகனத்தில் வந்தவர் ரெயில்வே கிராசிங்கில் விதிமீறலில் ஈடுபட்டது மிக தெளிவாக பதிவாகி இருக்கிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருவதை அடுத்து ரெயில்வே கிராசிங்கில் இதுபோன்ற விதிமீறலில் ஈடுபடுவோரை நெட்டிசன்கள் வசைபாடி வருகின்றனர்.