விரைவில் வருகிறது பாரத் அரிசி! கிலோ 25 ரூபாய் விலையில் கிடைக்குமாம்!

இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு சார்பில் ஒரு கிலோ ரூ.25 விலையில் அரிசி விற்பனை தொடங்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Bharat rice coming soon, to retail at discounted rate of Rs 25/kg: Report sgb

நாடு முழுவதும் அரிசியின் சில்லறை விற்பனை விலை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ள சூழலில், இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு சார்பில் ஒரு கிலோ ரூ.25 விலையில் அரிசி விற்பனை தொடங்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலையொட்டி, அதிகரித்து வரும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை சமாளிக்கும் முயற்சியாக ‘பாரத் அரிசி’யை அறிமுகப்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்று மூத்த அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.

'பாரத் அட்டா' என்ற பெயரில் கோதுமை மாவு, 'பாரத் தால்' என்ற பெயரில் பருப்பு வகைகள் ஆகியவற்றையும் தள்ளுபடி விலையில் வெற்றிகரமாக விற்பனை செய்துவருவதைத் தொடர்ந்து கிலோ 25 ரூபாய் தள்ளுபடி விலையில் அரிசி விற்பனை தொடங்கப்பட உள்ளது எனச் சொல்லபடுகிறது.

சமையல் சேனல் நடத்திக்கொண்டே கேட் தேர்வில் சாதனை படைத்த இளைஞர்!

Bharat rice coming soon, to retail at discounted rate of Rs 25/kg: Report sgb

தள்ளுபடி விலையில் வழங்கப்படும் பாரத் அரிசி இந்திய தேசிய வேளாண்மை கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (NAFED), இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF), கேந்திரிய பந்தர் விற்பனை நிலையங்கள் மற்றும் நடமாடும் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும் என்று தெரிகிறது.

பணவீக்கம் கடந்த ஆண்டை விட 14.1 சதவீதம் அதிகரித்துள்ளதைப் பிரதிபலிக்கும் வகையில், அரிசியின் சில்லறை விலை சராசரியாக ஒரு கிலோ ரூ.43.3 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாரத் கோதுமை மாவு ஒரு கிலோவுக்கு ரூ.27.50 விலையிலும், சனா பருப்பு கிலோ ரூ.60 விலையிலும் வழங்கப்பட்டு வருகின்றன. இவை நாடு முழுவதும் 2,000 சில்லறை விற்பனை நிலையங்களில் கிடைக்கின்றன. இதேபோல பாரத் அரிசியும் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

700 ரூபாய்க்கு கார் ஆர்டர் செய்த சின்னப் பையன்! வைரலான ஆனந்த் மஹிந்திரா ரியாக்‌சன்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios