ஹோண்டா கார்ஸ் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு அசத்தலான தள்ளுபடி மற்றும் சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
ஹோண்டா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடிகளை அறிவித்து இருக்கிறது. வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் கார் மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப சலுகைகளை தள்ளுபடி, இலவச அக்சஸரீக்கள், எக்சன்ஜ் மற்றும் லாயல்டி பலன்கள் வடிவில் பெற்றுக் கொள்ளலாம்.
ஹோண்டா சிட்டி (Gen 5)
ஐந்தாம் தலைமுறை ஹோண்டா சிட்டி மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10,500 மதிப்புள்ள இலவச அக்சஸரீக்கள், ரூ. 5 ஆயிரம் எக்சேன்ஜ் தள்ளுபடி, ரூ. 8 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஏற்கனவே ஹோண்டா வாடிக்கையாளராக இருப்பின் ரூ. 12 ஆயிரம் மதிப்பிலான கூடுதல் பலன்கள் பெற்றுக் கொள்ளலாம்.

ஹோண்டா ஜாஸ்
பிப்ரவரி மாதத்தில் ஜாஸ் மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் வரையிலான பலன்கள், ரூ. 12,100 மதிப்பிலான இலவச அக்சஸரீக்கள், ரூ. 5 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 4 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி, லாயல்டி மற்றும் எக்சேன்ஜ் போனஸ் சேர்த்து ரூ. 12 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.
ஹோண்டா WR-V
ஹோண்டா ஜாஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் WR-V மாடல் அதிகளவு இடவசதி கொண்டிருக்கிறது. இந்த மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலுக்கு ரூ. 26,150 மதிப்பிலான எக்சேன்ஜ், கார்ப்பரேட் மற்றும் லாயல்டி பலன்கள் வழஙஅகப்படுகிறது. எனினும், இவை அனைத்தும் பெட்ரோல் வேரியண்டிற்கு மட்டுமே பொருந்தும்.

ஹோண்டா சிட்டி (Gen 4)
இரண்டு விதமான பெட்ரோல் என்ஜின் மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனுடன் கிடைக்கும் நான்காம் தலைமுறை ஹோண்டா சிட்டி மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 20 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த மாடலின் டாப் எண்ட் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களின் விற்பனையை ஹோண்டா நிறுத்தியது.
ஹோண்டா அமேஸ்
கடந்த ஆண்டு மிட்-சைக்கிள் அப்டேட் செய்யப்பட்ட ஹோண்டா அமேஸ் மாடல் இருவித பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. அமேஸ் மாடலுக்கு ரூ. 5 ஆயிரம் லாயல்டி போனஸ், ரூ. 6 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 4 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் சலுகை விவரங்கள் ஒவ்வொரு நகரம் மற்றும் ஸ்டாக் இருப்புக்கு ஏற்ற வகையில் வேறுபடும்.
