bans palm oil export :இந்தோனேசியாவிலிருந்து பாமாயில் ஏற்றுமதிக்கு வரும் 28ம் தேதி முதல் தடை விதிக்கப்பட இருக்கும் நிலையில் சோப்பு, ஷாம்ப்பு, சமையல் எண்ணெய், நூடுல்ஸ் விலை அனைத்தும் விலை உயர்வதற்கு வாய்ப்புள்ளது.

இந்தோனேசியாவிலிருந்து பாமாயில் ஏற்றுமதிக்கு வரும் 28ம் தேதி முதல் தடை விதிக்கப்பட இருக்கும் நிலையில் சோப்பு, ஷாம்ப்பு, சமையல் எண்ணெய், நூடுல்ஸ் விலை அனைத்தும் விலை உயர்வதற்கு வாய்ப்புள்ளது.

பணவீக்கம் அதிகரிக்கும்

பாமாயில் சப்ளையில் ஏற்படும் பாதிப்பு, சோப்பு, ஷாம்ப்பு, உள்ளிட்ட பொருட்களுக்கு உள்ளீட்டுப் பொருள் செலவை அதிகரித்து விலை உயரக்கூடும். இதனால் வரும் மாதங்களில் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும். கடந்த மார்ச் மாத்தில் சில்லரை பணவீக்கம் 6.95% இருக்கிறது, இது ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவைவிட கூடுதல், பாமாயில்தட்டுப்பாடு ஏற்பட்டால், விலைவாசி உயர்ந்து பணவீக்கம் மேலும் அதிகரிக்கும்


இந்தோனேசியாவில் பாமாயில்விலை அதிகரித்ததால் விலைவாசியைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வரும் 28ம் தேதி முதல் பாமாயில் ஏற்றுமதிக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. உலகிலேயே பாமாயில் உற்பத்தியில் இந்தோனேசியா மிகப்பெரிய நாடாகும்.

விலைவாசி உயரும்

இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் சமையலுக்கு மட்டுமல்லாது, உணவுப் பொருட்கள் தயாரிப்பு, சோப்புகள் தயாரிக்க, அழகுசாதனப் பொருட்கள், பயோ-எரிபொருள் தயாரிக்கவும் பயன்படுகிறது. இதுமட்டுமல்லாமல் பிஸ்கட், நூடுல்ஸ், ஷாம்ப்பு, சாக்லேட் உள்ளிட்ட அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கு முக்கிய உள்ளீட்டுப் பொருள் பாமாயில்தான். 

இப்போது பாமாயில் இறக்குமதி தடைபட்டு, விலைவாசி உயரும்பட்சத்தில் இந்தப் பொருட்களின் விலை அனைத்தும் வரும் வாரங்களில் உயரக்கூடும். இந்தியா ஆண்டு தோறும் 80 லட்சம் டன் பாமாயில் இறக்குமதி செய்கிறது, இதில் 40 சதவீதம் சமையலுக்கு மட்டும் பயன்படுகிறது. 
உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக ஏற்கெனவே சூரியகாந்தி எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் பாமாயில் எண்ணெய் விலையும் வரும் வாரங்களில் 10 முதல் 15 சதவீதம் வரை உயரக்கூடும்.

உலக நாடுகளில் பாதிப்பு

ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகையில் “ வரும் வியாழக்கிழமை முதல்(28ம்தேதி) பாமாயில் ஏற்றுமதிக்கு இந்தோனேசியா தடைவிதித்துள்ளது. இதனால் சமையல் எண்ணெய்களான பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், கடுகு எண்ணெய் விலையும் வரும் நாட்களில் உயரலாம். இந்தோனேசியாவின் முடிவு பாமாயில் கிடைப்பதை மட்டும் பாதிக்காது, உலகளவில் காய்கறி எண்ணெய் கிடைப்பதையும் பாதிக்கும்” எனத் தெரிவித்துள்ளது

நெருக்கடி அதிகரிக்கும் 
ஸ்வஸ்திகா இன்வெஸ்ட்வார்ட் நிறுவனத்தின் ஆய்வுக்குழுத் தலைவர் சந்தோஷ் மீனா கூறுகையில் “ உக்ரைன் ரஷ்யா போரால் சமையல் எண்ணெய் சப்ளை தடைபட்டுள்ளது. இதனால் பாமாயில், சோயா எண்ணெய் விலை அதிகரி்த்துள்ளது. இந்தோனேசியாவின் ஏற்றுமதி தடை, மலேசிய அரசின் வரி உயர்வு மேலும் சிக்கலை உருவாக்கும்.

சோப்பு, ஷாம்ப்பு, பிஸ்கெட், நூடுல்ஸ் உள்ளிட்ட அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்களுக்கு உள்ளீட்டுப் பொருளாக பாமாயில் இருக்கிறது. விலை உயர்ந்தால், இந்துஸ்தான் யுனிலீவர், நெஸ்ட்லே, பிரிட்டானியா, கோத்ரேஜ், மரிகோ உள்ளிட்ட நிறுவனங்கள் பொருட்களின் விலையை ஏற்ற வேண்டிய நிலை ஏற்படும்”எ னத்தெரிவித்தார்