Asianet News TamilAsianet News Tamil

உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள தொகையை சரிபார்த்து கொள்ளுங்கள்... இன்று முதல் புதிய நடைமுறை அமல்..!

நாடு முழுவதும் ஒரே ஓட்டுநர் உரிமம், வங்கிகளின் மினிமம் பேலன்ஸ் தொகை குறைப்பு உள்ளிட்ட புதிய நடைமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்தது.
 

Banks reduce minimum balance ..! New procedures come into effect today
Author
Tamil Nadu, First Published Oct 1, 2020, 10:33 AM IST

நாடு முழுவதும் ஒரே ஓட்டுநர் உரிமம்..! வங்கிகளின் மினிமம் பேலன்ஸ் தொகை குறைப்பு உள்ளிட்ட புதிய நடைமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்தது.

ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமங்கள் கியூ ஆர் கோட், மைக்ரோ சிப் போன்ற மேம்படுத்தப்பட்ட வசதிகளைக் கொண்டிருக்கும். வாகனப் பதிவு நடைமுறைகளில் காகிதமில்லா முறை செயல்படுத்தப்படும். புதிய ஆர்.சி. புத்தகத்தில், உரிமையாளரின் பெயர் முன்பக்கத்தில் இருக்கும். அட்டையின் பின்பக்கம் மைக்ரோசிப் மற்றும் கியூஆர் குறியீடு இருக்கும்.

Banks reduce minimum balance ..! New procedures come into effect today

பெட்ரோல் நிலையங்களில் கிரெடிட் கார்டுகளுக்கு அளிக்கப்படும் தள்ளுபடி சலுகைகள் நிறுத்தப்படும். டெபிட் கார்டுகள் மற்றும் பேமண்ட் ஆப்ஸ்களை பயன்படுத்தினால் வழக்கமாந சலுகைகள் கிடைக்கும்.  பெரு நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்ட, கார்ப்பரேட் வரி குறைப்பு இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. இதனால் வீட்டுக்கடன், வாகனக் கடன் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.Banks reduce minimum balance ..! New procedures come into effect today

வங்கிகளின் மினிமம் பேலன்ஸ் தொகை, மெட்ரோ மற்றும் நகர் புறங்களில் ரூ.3,000 ஆகவும், கிராமப்புற வங்கிக் கிளைகளில் ரூ.1,000 ஆகவும் குறைக்கப்படும். உணவகங்களில், உணவு தயாரிக்கப்பட்ட விவரங்களை வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் எழுதி வைக்கப்பட்டிருக்க வேண்டும். காப்பீடு வாடிக்கையாளர்களுக்கு கொரோனா சிகிச்சையை உள்ளடக்கிய காப்பீடு வசதிகளை அளிக்க வேண்டும் என காப்பீடு நிறுவனங்களுக்கு புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இது போன்ற புதிய நடைமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்தது.

Follow Us:
Download App:
  • android
  • ios