bank strike 2022: பொதுத்துறை வங்கிகள் யூனியன் அமைப்பினர், மத்தியஅரசின் கொள்கை, ஓய்வூதியம், மற்றும் வாரத்துக்கு 5 நாட்கள் மட்டும்பணி ஆகியவற்றை வலியுறுத்தி வரும் 27ம் தேதி வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளன.

பொதுத்துறை வங்கிகள் யூனியன் அமைப்பினர், மத்தியஅரசின் கொள்கை, ஓய்வூதியம், மற்றும் வாரத்துக்கு 5 நாட்கள் மட்டும்பணி ஆகியவற்றை வலியுறுத்தி வரும் 27ம் தேதி வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளன.

ஐக்கிய வங்கி யூனியன் கூட்டமைப்பு(யுஎப்பியூ), 9 வங்கியூனியன்களைக் கொண்ட அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு(ஏஐபிஓசி), அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு(ஏஐபிஇஏ), தேசிய வங்கி ஊழியர்கள் அமைப்பு(என்ஓபிடபிள்யு) ஆகிய சங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சிஹெச் வெங்கடாச்சாலம் கூறுகையில் “ அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ஓய்வூதியத்தை மாற்றியமைப்பது, திருத்தம் செய்வது, அனைத்து ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய முறையை பின்தொடர அனுமதிக்க வேண்டும். இது தவிர வாரத்தில் 5 நாட்கள் மட்டும்தான் பணி, மத்திய அரசின் கொள்கை ஆகியவற்றுக்கு எதிராக வரும் 27ம்தேதி வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம்” எனத் தெரிவித்தார்

.

9 வங்கியூனியன்களைக் கொண்ட அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் சவுமியா தத்தா கூறுகையில் “ நாடுமுழுவதும் உள்ள 7 லட்சத்துக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். வங்கிகளின் கவலைகள், உணர்வுகளை, கோரிக்கைகளை வங்கி நி்ர்வாகமும், அரசும் கண்டு கொள்ளாதவரை போராட்டம் தொடரும் . இந்தப் போராட்டத்தால் ஒருநாள் மட்டும் வங்கிப்பணிகள் அனைத்தும் பாதிக்கும்” எனத் தெரிவித்தார்

வங்கிகள் வேலை நிறுத்தம் செய்தால் அன்று நாடுமுழுவதும் வங்கி தொடர்பான பரிவர்த்தனைகள் அனைத்தும் கடுமையாகப் பாதிக்கப்படும், பொருளாதாரத்துக்கு பெரும் இழப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது