ஜனவரி மாதத்தில் 16 நாட்கள் வங்கிகள் இயங்காது.. எந்தெந்த நாட்கள் தெரியுமா? முழு விவரம் இதோ..

ஜனவரி மாதத்தில் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது, நான்காவது சனி, ஞாயிறு மற்றும் பிற பிராந்திய விடுமுறைகள் ஆகியவை இதில் அடங்கும்.

Bank holidays in January 2024 Banks to remain shut for 16 days check full details Rya

2024-ம் ஆண்டு தொடங்கி உள்ள நிலையில் இந்த ஜனவரி மாதத்தில் இருக்கும் வங்கி விடுமுறைகள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். வாடிக்கையாளர்கள் அதற்கேற்ப தங்கள் நிதி நடவடிக்கைகளைத் திட்டமிடுவதை உறுதி செய்வதற்காக இந்திய ரிசர்வ் வங்கி இந்த பட்டியலை முன்கூட்டியே வெளியிடுகிறது.

அதன்படி ஜனவரி மாதத்தில் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது, நான்காவது சனி, ஞாயிறு மற்றும் பிற பிராந்திய விடுமுறைகள் ஆகியவை இதில் அடங்கும். எனினும் நாடு முழுவதும் இந்த விடுமுறை நாட்கள் பொருந்தாது. ஒவ்வொரு மாநிலத்தையும் பொறுத்து வங்கி விடுமுறை நாட்கள் மாறுபடும். எனவே அடுத்த மாதம் உங்களுக்கு வங்கி வேலை இருந்தால், வங்கி விடுமுறை நாட்களைப் பார்த்து, அதற்கேற்ப வேலையை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

ஜனவரி 2024 இல் வங்கி விடுமுறைகள்

ஜனவரி :  1 புத்தாண்டு தினம் - அருணாச்சல பிரதேசம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, பாண்டிச்சேரி, ராஜஸ்தான், சிக்கிம், தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு
ஜனவரி 2 : புத்தாண்டு விடுமுறை - மிசோரம்
ஜனவரி 2 - மன்னம் ஜெயந்தி - கேரளா
ஜனவரி 11 : மிசோரம் மிஷனரி தினம்
ஜனவரி 12 : சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி - மேற்கு வங்கம்
ஜனவரி 15 : மாக் பிஹு - அசாம்
ஜனவரி 15 : மகர சங்கராந்தி - குஜராத், கர்நாடகா, தெலுங்கானா மற்றும் சிக்கிம்
ஜனவரி 15 : பொங்கல் - தமிழ்நாடு, ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், பாண்டிச்சேரி 
ஜனவரி 16 : திருவள்ளுவர் தினம் தமிழ்நாடு
ஜனவரி 17 : குரு கோவிந்த் சிங் ஜெயந்தி - சண்டிகர், ஹரியானா, ஜம்மு மற்றும் காஷ்மீர், ஒடிசா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான்
ஜனவரி 17 : உழவர் திருநாள் - பாண்டிச்சேரி மற்றும் தமிழ்நாடு
ஜனவரி 23 : நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஜெயந்தி - அசாம், ஜார்கண்ட், ஒடிசா, திரிபுரா மற்றும் மேற்கு வங்காளம்
ஜனவரி 23:  கான்-ங்காய் - மணிப்பூர்
ஜனவரி 25 : ஹஸ்ரத் அலி ஜெயந்தி - உத்தரப்பிரதேசம்
ஜனவரி 25 : ஹிமாச்சல பிரதேச மாநில தினம்
ஜனவரி 26 : தேசிய குடியரசு தினம்

எனினும் இந்த விடுமுறை நாட்களில், நீங்கள் வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தால், நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் அல்லது UPI போன்ற ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கும் எந்த தடையும் இருக்காது.  எனினும் நாடு முழுவதும் இந்த விடுமுறை நாட்கள் பொருந்தாது. ஒவ்வொரு மாநிலத்தையும் பொறுத்து வங்கி விடுமுறை நாட்கள் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 1ஆம் தேதி இதையெல்லாம் பண்ண முடியாது.. பணம் தொடர்பான ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios