ஜூன் மாதத்தில் பண்டிகைகள், இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகள், ஞாயிற்றுக்கிழமைகள் என பல நாட்களில் வங்கிகள் மூடப்படும். வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிப் பணிகளை முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம். ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்தி பணிகளை மேற்கொள்ளலாம்.
ஜூன் மாதத்தில் வங்கிகள் பல நாட்களில் மூடப்பட உள்ளன. இந்த விடுமுறைகள் தேசிய மற்றும் மாநில அளவிலான பண்டிகைகள், இரண்டாம் சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் ஆகியவற்றை உள்ளடக்கியவை. வங்கிகளில் நேரடி சேவைகள் இந்நாட்களில் கிடைக்காது. எனவே, வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு முடிக்க வேண்டியது அவசியம்.
முக்கிய வங்கி விடுமுறை நாட்கள்:
ஜூன் 1 - ஞாயிற்றுக்கிழமை விடுமுறை
ஜூன் 6, 2025 (வெள்ளி): பகரீத் (Eid ul Adha) – திருவனந்தபுரம் மற்றும் கோச்சி பகுதிகளில் வங்கி விடுமுறை.
ஜூன் 7, 2025 (சனி): பகரீத் (Eid ul Zuha) – இந்தியாவின் பல மாநிலங்களில் வங்கி விடுமுறை.
ஜூன் 8 - ஞாயிற்றுக்கிழமை விடுமுறை
ஜூன் 10 - ஸ்ரீ குரு அர்ஜுன் தேவ் ஜியின் வீரவணக்க நாள் – பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் வங்கி விடுமுறை.
ஜூன் 11 - சந்த் கபீர் ஜெயந்தி – காங்க்டோக் மற்றும் ஷிம்லா பகுதிகளில் வங்கி விடுமுறை.
ஜூன் 14 - இரண்டாம் சனிக்கிழமை – அனைத்து வங்கிகளிலும் விடுமுறை.
ஜூன் 15 - அனைத்து மாநிலங்களிலும் பொதுவான விடுமுறை.
ஜூன் 22 - ஞாயிற்றுக்கிழமை விடுமுறை
ஜூன் 28 - நான்காவது சனிக்கிழமை விடுமுறை
ஜூன் 29 - ஞாயிற்றுக்கிழமை விடுமுறை
வங்கிகள் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகள், ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் மாநில அளவிலான பண்டிகைகளில் மூடப்பட்டிருகும் என்பதால் அதனை நினைவில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி பணிகளை திட்டமிட்ட வேண்டும். இல்லையேல் தேவையில்லாத அலைச்சல் ஏற்படும்.
அதேபோல் காசோலையை வங்கியில் செலுத்த செல்பவர்கள் அதனை கவனத்தில் கொண்டால் தேவையற்ற செக் பவுன்ஸ் ஆகியவற்றை தவிற்கலாம். மேலும் காலதாமதத்தால் ஏற்படும் அபராதம் விதிப்பு உள்ளிட்டவற்றை தள்ளிப்போடலாம்.
வங்கிகள் மூடப்பட்ட நாட்களிலும், வாடிக்கையாளர்கள் ஆன்லைன் சேவைகள் மூலம் தங்களது பணிகளை முடிக்கலாம். இதில் UPI, மொபைல் பேங்கிங், இன்டர்நெட் பேங்கிங் போன்ற சேவைகள் அடங்கும். எனவே, வாடிக்கையாளர்கள் தங்களது பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு, தேவையான பணிகளை வங்கிகள் திறந்திருக்கும் நாட்களில் முடிக்க பரிந்துரைக்கப்படுகிறது.
