bank holidays 2022 october: அட்ராசக்கை! அக்டோபரில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை: முழுப் பட்டியல் இதோ !
அக்டோபர் மாதத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமை சேர்த்து வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுறை என ரிசர்வ் வங்கியின் விடுமுறைப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் மாதம் என்றாலே பண்டிகைக் காலம், தசரா பண்டிகை, தீபாவளி, காந்தி ஜெயந்தி, வங்கி அரையாண்டு கணக்கு முடிப்பு என ஏராளமான நாட்கள் வருகின்றன.
இவற்றோடு சேர்த்து சனி, ஞாயிறுக் கிழமையும் வருவதால் 21 நாட்கள் விடுமுறை இருக்கிறது. ஆனால், இந்த 21 நாட்கள் விடுமுறையும் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்டு இருக்கும். சில விடுமுறை நாட்கள் சில மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
துர்கா பூஜை, விஜய தசமி, தீபாவளி, காந்தி ஜெயந்தி ஆகியவை மட்டுமே அனைத்து வங்கிகளுக்கும் பொதுவான விடுமுறை நாட்களாகும். ஆனால், இந்த பண்டிகை கூட சில மாநிலங்களில் வேறுபட்டு இருக்கம்போது, விடுமுறையும் மாறுபடும்.
முத்ரா திட்டம் பயனற்றது! ரூ.3.73 லட்சத்தில் எத்தனை பேருக்கு வேலை கொடுப்பிங்க? ப.சிதம்பரம் கேள்வி
அக்டோபர் மாத விடுமுறை நாட்கள்
அக்டோபர் 1 – வங்கி அரையாண்டு கணக்கு முடிப்பு
அக்டோபர் 2- ஞாயிற்றுக்கிழமை-காந்தி ஜெயந்தி
அக்டோபர் 3- துர்கா பூஜை(மகா அஸ்டமி)
அக்டோபர் 4- துர்கா பூஜை-தசரா, ஆயுதபூஜை, ஸ்ரீமந்தா சங்கர்தேவா ஜென்மோஸ்தவ்
அக்டோபர் 5- துர்கா பூஜை-தசரா, விஜயதசமி, ஸ்ரீமந்தா சங்கர்தேவா ஜென்மோஸ்தவ்
அக்டோபர் 6- துர்கா பூஜை(தாஸ்ஹெயின்)
அக்டோபர் 7- துர்கா பூஜை
அக்டோபர் 8- 2வது சனிக்கிழமை(இறைத்தூதர்முகமது நபி பிறந்தநாள்)
அக்டோபர் 9- ஞாயிற்றுக்கிழமை
அக்டோபர் 13- கர்வா சவுத்
அக்டோபர் 14- மிலாது நபி
அக்டோபர் 16- ஞாயிற்றுக்கிழமை
அக்டோபர் 18- காதி பிஹூ
அக்டோபர் 22- 4-வது சனிக்கிழமை
அக்டோபர் 23- ஞாயிற்றுக்கிழமை
அதானி தூங்கி எழுந்தால் ரூ.1,600 கோடி!12 இந்தியர்களிடம் ஒரு லட்சம் கோடிக்கும் மேல் சொத்து
அக்டோபர் 24- காளி பூஜை-தீபாவளிய லட்சுமி பூஜை- நர்கா சதுர்தசி
அக்டோபர் 25- லட்சுமி பூஜை- தீபாவளி-கோவர்த்தன் பூஜை
அக்டோபர் 26- கோவர்த்தன் பூஜை- விக்ரம் சம்வந்த் புத்தாண்டு-பாய் பிஜ்- பாய் தூஜ்- தீபாவளி
அக்டோபர் 27- பாய் தூஜ்- சித்திரகுப்தர் பிறந்தநாள்- லட்சுமி பூஜை- தீபாவளி-நிங்கோல் சக்குபா
அக்டோபர் 30- ஞாயிற்றுக்கிழமை
அக்டோபர் 31- சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள்- சூர்ய பாஸ்தி தாலா சாத், சாத் பூஜை
டாய்ச்சி-போர்டிஸ் வழக்கு: மல்விந்தர் சிங், ஷிவிந்தர் சிங் சகோதரர்களுக்கு 6 மாதம் சிறை
வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை இருந்தாலும், ஆன்-லைன் சேவை தொடர்ந்து இருக்கும். வங்கிகளில் நேரடியாகச் சென்று பணத்தை டெபாசிட் செய்யவோ அல்லதுஎடுக்கவோ முடியாது, ஆனால், இன்டர்நெட் சேவைமூலம் ஆன்லைன் மூலம் பரிவர்த்தனை செய்யலாம். வங்கி வாடிக்கையாளர்கள் கணக்குவைத்துள்ள வங்கியைத் தொடர்பு கொண்டு விடுமுறை நாட்களை அறிந்து கொள்ளலாம்