கடும் எரிச்சலில் வங்கி ஊழியர்கள்...!! செயல்பாடு பொருத்து ஊக்கத் தொகை பரிந்துரையால் கடுப்பு..!!

 பொதுத்துறை  வங்கி  பணியாளர்களுக்கு,  அவர்களுடைய  செயல்பாடுகளை பொறுத்தே

ஊக்கத் தொகை   வழங்கலாம்  என  வங்கி வாரிய தலைவர்  வினோத் ராய் தெரிவித்தார்.

இதற்கு  அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் பெரும் எதிர்ப்பு  தெரிவித்தது.

இது குறித்து   அகில இந்திய  வங்கி ஊழியர்   சங்கத்தினர்  பல்வேறு கோர்க்கைகளை  முன்வைத்துள்ளனர்.அதன்படி,

அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலர் ஹர்வீந்தர் சிங் :

சி2சி எனப்படும் முறையில் ஊதியம் நிர்ணயிக்க  திட்டமிட்டுள்ளதாகவும்,இதன்  காரணமாக , ஊதிய உயர்வு, அலவன்ஸ் உள்ளிட்ட பிற சலுகைகள்  அனைத்தும் , வருங்காலங்களில்  மறுக்கப்படும்  எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒவ்வொருவரின்  செயல்பாடு  குறித்து, ஊக்க தொகை வழங்குவது என்பது  வங்கித்துறைக்கு பொருந்தாது  எனவும்,  ஒரு  வேளை செயல்பாடு  அடிப்படையில் ஊக்க தொகை அளித்தால் , சக  ஊழியார்களிடையே  மனக்கசப்பு  உருவாகும்  எனவும் தெரிவித்தார்.

வங்கி  ஊழியர் சம்மேளனத்தை  கலைக்க  முயற்சி :

தொழிலாளர் விரோத நடவடிக்கை மற்றும் சங்கங்களைக் கலைக்கும் முயற்சியை வங்கியாளர் கூட்ட மைப்பு கடுமையாக எதிர்ப்பதாக தேசிய வங்கி பணியாளர் கூட்ட மைப்பின் துணைத் தலைவர் அஸ்வினி ராணா குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பு :

வங்கி  ஊழியர்களுக்கான, ஊதிய  மாற்றம் வரும்  நவம்பர்   மாதத்தில்  மாற்றி அமைக்க  வேண்டும் என்பது குறிபிடத்தக்கது