வங்கிகள், எண்ணெய் நிறுவனங்கள் தான் பரிவர்த்தனை  கட்டணத்தை  ஏற்க வேண்டும்: அமைச்சர்  தர்மேந்திர பிரதான்  அறிவிப்பு ..!

ரூபாய்  நோட்டு செல்லாது என  அறிவித்த பிறகு  டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் பொருட்டு, பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப் படாது  என மத்திய அரசு தெரிவித்தது.

டிஜிட்டல்  பரிவர்த்தனை :

டிஜிட்டல் பரிவர்த்தனை களுக்கு எந்தவிதமான பரிவர்த் தனை கட்டணமும் வசூலிக்கப்பட  மாட்டாது  என்றும்,  அதே சமயத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் எரி பொருள் நிரப்பப்படும் பட்சத்தில் 0.75 சதவீத தள்ளுபடி வழங்கப் படும் என்றும்  ஏற்கனவே  மத்திய  அரசு தெரிவித்தது.

இதனிடையே, டெபிட் கார்டு  மற்றும்  கிரெடிட் கார்ட்  பயன்படுத்துவதற்கு, வரி  வசூலிக்க  பட  மாட்டாது  என  50 நாட்களுக்கு மட்டும், விலக்கு  அளித்தது. அதன் பிறகு அதிகபட்சம் 1 சதவீதம் பரிவர்த்தனை வரி விதிக்க வங்கிகள் முடிவு செய்தன. ஆனால்,  எண்ணெய்  நிறுவனகள்  இதற்கு  ஒத்து  வராத  நிலையில்,  தற்போது பெட்ரோல்  பங்கில் , டெபிட் மற்றும் கிரெடிட்  கார்டு  வாங்க   மறுத்துள்ளது.

இந்நிலையில், கார்டு பரிவர்த்தனை கட்டணத்தை வங்கிகள் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்  என்பது  குறிப்பிடத்தக்கது.