Asianet News TamilAsianet News Tamil

RBI : அதிர்ச்சி அறிவிப்பு! ஏ.டி.எம்மில் பணம் எடுக்க 21 ரூபாய் கட்டணம்.. ரிசர்வ் வங்கியின் புத்தாண்டுப் பரிசு..

வரும் 2022ம் ஆண்டு புத்தாண்டு தினமான ஜனவரி 1 முதல் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி

ATM Withdrawals to become costly from Jan 1
Author
Chennai, First Published Dec 7, 2021, 1:52 PM IST

ஏ.டி.எம் மிஷின்களில் மாதம் 5 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும். 6ஆவது முறையிலிருந்து வங்கிக்கு ஏற்ப 17 ரூபாய் முதல் 20 ரூபாய் கட்டணம் தற்போது வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டனத்தை வரும் ஜனவரி 1ம் தேதி முதல் மேலும் உயர்த்துவதாக அறிவித்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. 5 முறைக்கு மேல் பணம் எடுக்க இனி 21 ரூபாய் கட்டணம் வங்கிக் கணக்கிலிருந்து பிடித்தம் செய்யப்படும். அதுமட்டுமல்ல அந்த 21 ரூபாய்க்கு ஜி.எஸ்.டி வரியும் உண்டு.

ATM Withdrawals to become costly from Jan 1

இதுவரையில் கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏ.டி.எம் மையங்களில் 5 முறையும், மற்ற வங்கி ஏ.டி.எம் களில் 3 முறையும் இலவசமாக பணம் எடுப்பதொ அல்லது கணக்கு இருப்பை அறிந்துகொள்வதோ அனுமதிக்கப்பட்டது. இனியும் அதுவே தொடரும் என்றாலும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இது குறித்த ரிசர்வ் வங்கியின் அறிவிப்பில், வங்கிகளுக்குள்ளான தகவல் பரிமாற்றம், ஒரு வங்கியில் கணக்கு வைத்துள்ள நபர் மற்ற வங்கிகளில் பணம் எடுக்கும் போது அதுகுறித்த வங்கிகளுக்கு மத்தியிலான இடைமாற்ற கட்டணம், வங்கி நடைமுறை செலவுகள் அதிகரிப்பு ஆகியவை காரணமாக இந்த விலை உயர்வு ஏற்படுவதாக கூறப்படுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பை ஆக்ஸிஸ், ஹெச்.டி.எஃப்.சி ஆகிய தனியார் வங்கிகள் தங்கள் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios