நீங்களே ஒரு ATM சென்டர் ஆரம்பிங்க! மாதம் ரூ.60000 அள்ளுங்க!
உங்கள் கிராமத்தில் அல்லது பகுதியில் ஏடிஎம் அமைத்து மாதம் ரூ.60,000 வரை சம்பாதிக்கலாம். வங்கிகள், தனியார் ஏஜென்சிகள், முதலீடு, தேவைகள் மற்றும் உங்கள் சொந்த ஏடிஎம் தொழிலைத் தொடங்குவதற்கான செயல்முறை இங்கு பார்க்கலாம்.
எல்லா துறையிலும் ஏராளமான தொழில் வாய்ப்புகள் உள்ளன. அதில் ஒன்றுதான் ATMகள் அமைப்பது. நீங்கள் புத்திசாலிதனத்துடன் ATM பணியை அமைத்தால், மாதம் ரூ.60 ஆயிரம் வரை வருமானம் பெறலாம். எப்படி என்று தெரிந்து கொள்வோமா!.
டிஜிட்டல் இந்தியா என்ற பெயரில் இளம் தொழில்முனைவோரை மத்திய, மாநில அரசுகள் ஊக்கப்படுத்தி வருகின்றன. புதிய ஸ்டார்ட்அப்களை ஊக்குவிக்கவும் அரசுகள் மானியங்கள், கடனுதவி போன்றவைகள் வழங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக நீங்கள் ATMகளை அமைத்து பணம் சம்பாதிக்கலாம்.
வங்கிகள் பொதுவாக வாடிக்கையாளர்களுடன் வணிகம் செய்கின்றன. கடன் கொடுத்து வட்டி வசூலிக்கிறது. ஆனால் வங்கிகளுடன் நாமே வியாபாரம் செய்யலாம். நிகர வருமானமும் ஈட்ட முடியும். அதாவது, பெரும்பாலான வங்கிகள் ATMகளை தாங்களாகவே நிறுவுவதில்லை. ATMகள் அமைக்க தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் விடப்படும். சில தனியார் வங்கிகள் சொந்தமாக ATMகளை இயக்குகின்றன.
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தனது ATM-களை அமைப்பதை தனியார் நிறுவனங்களுக்கு அவுட்சோர்ஸ் செய்கிறது. நாங்கள் அவர்களை தொடர்பு கொண்டு SBI வங்கிக்கு ஏடிஎம் ஏற்பாடு செய்யலாம்.
தனியார் நிறுவனங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது?
SBI தனது சொந்த ATMகளைத் தவிர, மற்ற இடங்களில், கிராம்பபுறங்களில் ATMகளை அமைத்து இயக்குவதற்கு டாடா இண்டிகேஷ், மூதூட் ஏடிஎம் மற்றும் இந்தியா ஒன் ஏடிஎம் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த நிறுவனங்களுக்கு விண்ணப்பிப்பதன் மூலம் உங்கள் கிராமத்தில், நகரத்தில் உள்ள நல்ல இடத்தை தேர்வு செய்து ஏடிஎம் அமைக்கலாம். இதற்கு பாதுகாப்பு வைப்புத் தொகையாக ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும். மேலும், பணி மூலதனத்தின் கீழ் ஒரு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும். ஆகமொத்தம் ரூ.5 லட்சத்தை முதலீடு செய்தால் ஏடிஎம் அமைக்கலாம்.
சில நிமிடங்களில் ரூ.1 லட்சத்தை பிஎஃப் கணக்கில் இருந்து வித் டிரா செய்யலாம்.. முழு விபரம் இதோ!!
விண்ணப்பிப்பது எப்படி?
ATM அமைப்பதற்கு குறைந்தபட்சம் 50 முதல் 60 சதுர அடியில் ஒரு அறை தேவை. ஷட்டர் கதவு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் கண்டிப்பான முறையில் செய்யப்பட வேண்டும். இந்த ஏடிஎம் மையத்திற்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்பட வேண்டும். 1 Kv மின் இணைப்பு ஏற்படுத்த வேண்டும். இந்த ATMலிருந்து 100 மீட்டருக்குள் வேறு மற்ற வங்கி ஏடிஎம்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு குறைந்தது 300 பரிவர்த்தனைகள் உறுதி செய்யப்பட வேண்டும். அப்போது குறைந்தபட்சம் மாதம் ரூ.60 ஆயிரத்திற்கு மேல் சம்பாதிக்கலாம்.