Asianet News TamilAsianet News Tamil

முழு பாதுகாப்புடன் பெயிண்டிங் பணி; ஊழியர்கள் நலனில் அக்கறை..! ஏசியன் பெயிண்ட்ஸின் புதுவித சேவை

ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம், ஊழியர்கள் முழு பாதுகாப்புடன் பணிபுரிவதற்கான அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் எடுத்து, அதன்மூலம் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்துள்ளது. 
 

asian paints introduces safe painting services to ensure painters safety and health
Author
Chennai, First Published Jun 1, 2020, 3:59 PM IST

கொரோனா அச்சுறுத்தலால் கடந்த 2 மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்தது. நான்காம் கட்ட ஊரடங்கு நேற்றுடன் முடிந்த நிலையில், ஐந்தாம் கட்ட ஊரடங்கில் நிறைய தளர்வுகளுடன் பெரும்பாலான தொழில்களும் பணிகளும் நடைபெற அரசு அனுமதியளித்துள்ளது. கொரோனா, மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையின் பழக்கவழக்கங்களில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. முகக்கவசம் அணிவது, கிருமிநாசினி பயன்படுத்துவது, வீட்டிலிருந்தே பணிபுரிவது, தம்மையும் வீட்டையும் சுத்தமாக வைத்திருப்பது என மக்களின் அன்றாட பழக்கவழக்கங்களில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தற்போதைய சூழலில், கொரோனா ஏற்படுத்தியுள்ள சமூக பழக்கவழக்க மாற்றங்களுக்கு ஏற்றவாறு தங்களை தகவமைத்துக்கொண்டு, அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி, ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. முழு பாதுகாப்புடன் பெயிண்டிங் பணிகளை ஊழியர்கள் மேற்கொள்வதற்கான பாதுகாபு வசதிகளை ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

நாடு முழுவதும் அனைத்து சிட்டிகளிலும் புதிய பெயிண்டிங் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தூசி அண்டாத புதிய முறையிலான பெயிண்டிங் டெக்னிக்குகள், அதிகமான பெயிண்டர்கள் பணியில் ஈடுபடுவதை குறைக்கிறது. எனவே அதன்மூலம், ஊழியர்களுக்கு இடையிலான மற்றும் வீட்டு உரிமையாளர்களுடனான தனிமனித இடைவெளி உறுதி செய்யப்படுகிறது. 

பெயிண்டர்கள் பெயிண்டிங் பணியை தொடங்குவதற்கு முன்பாக, கிருமிநாசினி மூலம் தங்களது முழு உடலையும் சுத்தப்படுத்தி கொண்டு தான் பணியை தொடங்குவார்கள். முகக்கவசமும் முழுக்கவச உடையும் அணிந்துகொண்டுதான் பணிபுரிவார்கள். ஒவ்வொரு நாளும் வேலை முடிந்த பின்னர், அந்த இடத்தில் குப்பைகள் தேங்காமல் முழுவதுமாக சுத்தம் செய்துவிட்டு, மீண்டும் உடலை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்திவிட்டுத்தான் வீடு திரும்புவார்கள். ஊழியர்கள் பணி முடிந்து வீடு திரும்பும்போது, ஆரோக்கியமாகவும் பாதுகாப்புடனும் வீடு திரும்புவதை உறுதி செய்வதை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் ஏசியன் பெயிண்ட்ஸ் எடுத்துள்ளது.

ஏசியன் பெயிண்ட்ஸின் முக்கியமான முன்னெடுப்புகளில் ஒன்றான “பாதுகாப்பான பெயிண்டிங் சேவை”, கொரோனா அச்சுறுத்தலால் பெயிண்டிங் பணிகள் தடைபடாமல் இருப்பதை உறுதி செய்கிறது. நமது பாதுகாப்பிலும் ஆரோக்கியத்திலும் நிறுவனம் அக்கறை செலுத்துகிறது என்ற நம்பிக்கையை ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் கொடுக்கிறது. ”ஒரே நாடு ஒரே குரல்” என்ற கீதத்திற்கு ஸ்பான்ஸர் செய்த ஏசியன் பெயிண்ட்ஸ், அந்த வீடியோ மூலம் வந்த வருமானத்தையும் பிரதமர் கேர்ஸ் நிதிக்கு அளித்தது. அதற்கு முன்பாகவே, ரூ.35 கோடியை பிரதமர் கேர்ஸ் நிதிக்கும் மாநில முதல்வர்கள் நிதிக்கும் பகிர்ந்தளித்தது ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம். 

ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் தங்களது சிறப்பான முன்னெடுப்புகளால் நாட்டு மக்களுக்கு சிறந்த எதிர்காலத்திற்கான நம்பிக்கையை அளிக்கிறது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios