anand mahindra : venu srinivasan:  மகிந்திரா அன்ட் மகிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா, டிவிஎஸ் மோட்டார் குழுமத்தின் தலைவர் வேணு ஸ்ரீனிவாசன் ஆகியோரை ரிசர்வ் வங்கியின், பகுதிநேர அலுவல்சார வாரியக்குழுவில் உறுப்பினர்களாக மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.

மகிந்திரா அன்ட் மகிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா, டிவிஎஸ் மோட்டார் குழுமத்தின் தலைவர் வேணு ஸ்ரீனிவாசன் ஆகியோரை ரிசர்வ் வங்கியின், மத்திய நிர்வாகக் குழுவில் பகுதிநேர அலுவல்சார இயக்குநர்களாக மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.

இவர்கள் இருவர் தவிர, ஜைடஸ் லைப்சயின்ஸ் நிறுவனத்தின் தலைவர் பங்கஜ் படேல், இந்தியன் இன்ஸ்டியூட் அகமதாபாத் முன்னாள் பேராசிரியர் ரவிந்திர தோல்கா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்

ரிசர்வ் வங்கியின் 6 பேர் கொண்ட நிதிக்கொள்கைக் குழுவில் தோல்கா ஏற்கெனவே உறுப்பினராக இருந்தார். இந்த 4 பேரும் அடுத்த 4 ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் தொடர்வார்கள். ரிசர்வ் வங்கி வாரியக் குழு உறுப்பினர்கள் வட்டிவீதத்தை முடிவு செய்யும், நிதிக்கொள்கைக் குழுவில் தலையிடமாட்டார்கள், ஆனால் ரிசர்வ் வங்கிக்கு அறிவுரைகளும், பரந்த எண்மங்களையும் வழங்குவார்கள்.

ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில் “ஆனந்த் கோபால் மகிந்திரா, வேணு ஸ்ரீனிவாசன், பங்கஜ் ராமன்பாய், ரவிந்திர தோலகியா ஆகியோரை பகுதிநேர அலுவல்சாரா இயக்குநர்களாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆர்பிஐ வாரியத்தில் மொத்தம் 11 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த 4 பேரைச் சேர்க்கும் போது 15 பேராக உயரும். இதில் டாடா குழுமத்தின் தலைவர் நடராஜன் சந்திரசேகரனும் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தகக்துஅடுத்த மாதத்தில் 4 உறுப்பினர்களின்பதவிக்காலம் முடிகிறது. இதில் எஸ் குருமூர்த்தி, சத்தீஸ் மராத்தே பதவிக்காலம் ஆகஸ்டிலும், ரேவதி ஐயர், சச்சின் சதுர்வேதி பதவிக்காலம் செப்டம்பரிலும் முடிகிறது. 

ரிசர்வ் வங்கி சட்டத்தின்படி, ரிசர்வ் கவர்னர், 4 துணை கவர்கள் உள்பட 21 வாரியக்குழு உறுப்பினர்கள் இருக்கலாம். மேலும் இரு அரசு அதிகாரிகள், பொருளாதார விவகாரத்துறை, நிதித்துறை செயலாளர்களையும் சேர்க்கலாம்.