Asianet News TamilAsianet News Tamil

9000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த அமேசான்! - காரணம் என்ன தெரியுமா?

அமேசான் நிறுவனம் மீண்டும் ஊழியர்களை பணநீக்கம் செய்யத் தொடங்கியுள்ளது. சுமார் 9000 ஊழியர்களுக்கு மெமோ கொடுத்து அமேசான் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.
 

Amazon to lay off 9000 employees! - Do you know the reason?
Author
First Published Apr 27, 2023, 12:08 PM IST | Last Updated Apr 27, 2023, 12:08 PM IST

அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆன்டி ஜெஸ்ஸி இந்த ஆண்டு தொடக்கத்திலேயே பணிநீக்க நடவடிக்கைகள் குறித்து அறிவித்திருந்தார். அதன் படி மூன்றாம் சுற்று பணி நீக்க நடவடிக்கை இப்போது தொடங்கியுள்ளது. கடந்த இரண்டாம் சுற்று பணி நீக்க நடவடிக்கையில் ட்விச், மற்றும் விளம்பரப் பிரிவைச் சேர்ந்த ஊழிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த மூன்றாம் கட்ட பணிநீக்கத்தில், அமேசான் வெப் சர்வீஸ், மனிதவள மேம்பாட்டு பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள் அதிகம் என தெரிவித்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள சிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில் ஏற்கனவே கிட்டத்தட்ட 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த அமேசான் மீண்டும் ஆள் குறைப்பு நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது.

சமீபத்திய பணியாளர்களை குறைப்பதில், Amazon Web Services CEO Adam Selipsky மற்றும் மனித வளத்துறை தலைவர் Beth Galetti ஆகியோர் அமெரிக்கா, கனடா மற்றும் கோஸ்டாரிகாவில் உள்ள ஊழியர்களுக்கு மெமோக்களை அனுப்பியுள்ளனர்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios