Asianet News TamilAsianet News Tamil

“உலகில் உள்ள செல்லங்கள் எல்லாம் ஒண்ணுமே இல்ல..” பேத்திக்காக கௌதம் அதானி போட்ட நெகிழ்ச்சி பதிவு..

கௌதமி அதானி தனது பேத்தியுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

All The Wealth In The World..." Gautam Adani's Post For Granddaughter Rya
Author
First Published Apr 3, 2024, 12:38 PM IST

அதானியின் கிரீன் எனர்ஜி லிமிடெட் (ஏஜிஎல்) இந்தியாவின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமாகும், இது உலகளவில் சுத்தமான எரிசக்தி மாற்றத்தை முன்னெடுத்துச் செல்கிறது. அம்பானி, அதானி போன்ற கோடீஸ்வரர்களின் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளும் தலைப்பு செய்திகளாக மாறிவிடுகின்றன. அந்த வகையில் கௌதமி அதானி தனது பேத்தியுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதானி குழுமத்தின் தலைவரும் நாட்டின் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான கெளதம் அதானி தனது 14 மாத பேத்தி காவேரியுடன் இருக்கும் படத்தை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தனது மகன் கரண் அதானி மற்றும் அவரது மனைவி பரிதி ஆகியோரின் மகள் இந்த குழந்தை காவேரி ஆவார்.

Parenting Tips tamil : உங்கள் குழந்தைக்கு Good Touch, Bad Touch பற்றி எப்படி சொல்லிக் கொடுப்பது?

அதானி தனது பதிவில் “ இந்தக் கண்களின் பிரகாசத்துடன் ஒப்பிடுகையில் உலகில் உள்ள அனைத்து செல்வங்களும் மங்கிவிடும்.." என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும் "எனது பேத்திகளுடன் நேரத்தை செலவிட நான் விரும்புகிறேன், அவள் எனது மிகப்பெரிய மன அழுத்தத்தை நீக்குபவர்கள். எனக்கு இரண்டு உலகங்கள் மட்டுமே உள்ளன. ஒன்று வேலை, மற்றொன்று குடும்பம், என்னைப் பொறுத்தவரை, குடும்பம் ஒரு சிறந்த ஆதாரம்," என்று அதானி தெரிவித்துள்ளார்.

 

இது லண்டனில் உள்ள அறிவியல் அருங்காட்சியகத்தில் உள்ள புதிய அதானி பசுமை ஆற்றல் கேலரியில் எடுக்கப்பட்ட புகைப்படம், அதானி தனது பேத்தியுடன் புன்னகைப்பதை இந்த போட்டோவில் பார்க்க முடிகிறது.. புகைப்படத்தின் பின்னணியில் அதானியின் மனைவி மற்றும் காவேரியின் பெற்றோரும் சிரித்துக் கொண்டிருப்பதையும் பார்க்க முடிகிறது..

'ஆற்றல் புரட்சி: அதானி பசுமை ஆற்றல் காட்சியகம்' என்ற தலைப்பிலான கண்காட்சி மார்ச் 26 அன்று லண்டனில் நடைபெற்றது. இதில் பங்கேற்க அதானியின் குடும்பம் லண்டனுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தது. 

இஷா அம்பானியின் லாஸ் ஏஞ்சல்ஸ் வீட்டை வாங்கிய பிரபல ஹாலிவுட் ஜோடி.. எத்தனை கோடிக்கு தெரியுமா?

இதனிடையே டாக்டர் பிரிதி அதானியின் தலைமையில், அதானி அறக்கட்டளை 4  அதானி வித்யா மந்திர் பள்ளிகளில் 3,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவசக் கல்வியை வழங்குகிறது, 29 பள்ளிகள் மூலம் 24,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மானியக் கல்வியை வழங்குகிறது, மேலும் 1,13,000 மாணவர்களுக்குச் சென்றடைகிறது. உத்தன் மற்றும் ஞானோதயா மூலம் 552 அரசுப் பள்ளிகளில்.இந்த கல்வி சேவை மாணவர்களை சென்றடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios