Asianet News TamilAsianet News Tamil

மெர்சிடிஸ் பென்ஸின் பெருமைக்குரிய அறிமுகங்கள் GLE LWB மற்றும் GLS கார்கள்..!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் பாரம்பரியத்தையும் பெருமையையும் அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் விதமாக, முற்றிலும் புதுமையான GLE LWB மற்றும் GLS ஆகிய 2 புதிய மாடல்களை சந்தையில் இறக்கியுள்ளது.

all new mercedes benz gle lwb and gls demonstrates all kinds of strength
Author
Chennai, First Published Jul 10, 2020, 6:38 PM IST

சொகுசு, ஆடம்பரம், திறன், தொழில்நுட்பம் ஆகிய வார்த்தைகளுக்கெல்லாம் உண்மையான அர்த்தம் மெர்சிடிஸ் பென்ஸ். மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்கிவிட வேண்டுமென்பது உலகில் பலபேரின் கனவாக இருக்கிறது. தனது கேரேஜில் மெர்சிடிஸ் பென்ஸை கெத்தாக நிற்கவைக்க யாருக்குத்தான் பிடிக்காமல் போகும்? 

மெர்சிடிஸ் பென்ஸ் பல்லாண்டுகளாக முன்னணி கார் நிறுவனமாக திகழ்ந்துவருகிறது. அதிநவீன தொழில்நுட்பம், தனித்துவமான மற்றும் பிரமிக்க வைக்கும் வடிவமைப்புகளுக்கு பெயர்போனது மெர்சிடிஸ் பென்ஸ். ஒவ்வொரு காரும், வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தை கொடுக்கும் வகையிலும், அதன் குதிரைத்திறனுக்கு மிஞ்சிய செயல்திறனுடன் இயங்கினாலும், சொகுசாக பயணிப்பதற்கான உட்கட்டமைப்பு வசதிகளுடனும் ஒவ்வொரு மெர்சிடிஸ் பென்ஸ் காரும் உருவாக்கப்படுகிறது. மெர்சிடிஸ் பென்ஸ் எப்போதுமே ஸ்பெஷல் தான்.

all new mercedes benz gle lwb and gls demonstrates all kinds of strength

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் பாரம்பரியத்தையும் பெருமையையும் அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் விதமாக, புதிதாக 2 கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. GLE LWB மற்றும் GLS ஆகிய 2 புதிய மாடல்களை சந்தையில் இறக்கியுள்ளது மெர்சிடிஸ் பென்ஸ். இந்த கார்களின் சிறப்பம்சங்கள், மெர்சிடிஸ் பென்ஸின் டிரேட்மார்க் ஆகியுள்ளது. 

all new mercedes benz gle lwb and gls demonstrates all kinds of strength

முற்றிலும் புதிய மெர்சிடிஸ் பென்ஸின் GLE LWB ரக கார், அதன் அருமையான வடிவமைப்பு மற்றும் சக்தி வாய்ந்த செயல் திறனின் மூலம் உங்களது மனதை கொள்ளை கொள்ளும். 5 பேர் அமரக்கூடிய எஸ்.யூ.வி மாடலான ஜி.எல்.இ ரக காரில் பின் இருக்கை வசதியாக இருக்கும் வகையில் வீல்பேஸ் நீளமாக அமைக்கப்பட்டுள்ளது. அதனால், பின்னிருக்கை இடவசதியுடனும் சொகுசாகவும் இருக்கும். 20’’ அலாய் சக்கரங்கள், ஆஃப் ரோட் ஏபிஎஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஸ்டிரியங்குடன் உருவாக்கப்பட்டுள்ளது. முற்றிலும் புதிய GLE LWB காரில், உயர்ரக பாதுகாப்பு அம்சங்களை கொண்டது. ஸ்போர்ட்ஸ் 7 ஏர் பேக்ஸ், பரந்த சன்ரூஃப், blind spot assist, ADS+ உடன் AIRMATIC suspension, கண்கவர் உட்கட்டமைப்பு, NTG 6 MBUX ஆகிய சிறப்பம்சங்களை கொண்டது ஜி.எல்.இ ரக கார். காண்போரை கவரக்கூடிய அழகிய பனோராமிக் ஸ்லைடிங் சன்ரூஃப் இருப்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மெர்சிடிஸ் பென்ஸின் எஸ்யூவி மாடல் எஸ்-கிளாஸ் ரகம் தான் ஜி.எல்.எஸ். ஈ.க்யூ பூஸ்ட் டெக்னாலஜியை கொண்ட, 7 பேர் அமரக்கூடிய கார். ஓட்டுநர்களின் தேவைகளை கருத்தில்கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜி.எல்.எஸ் காரில் ஸ்போர்ட்ஸ் மல்டிபீம் எல்.இ.டி முகப்புவிளக்குகள் இரவில் கார் ஓட்டுவதை இனிமையாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த காரும் 21’’ அலாய் சக்கரங்களை கொண்டது. இருபுறமும் ரப்பர் ஸ்டட்டுடன் மிளிரும் ரன்னிங் போர்டு உள்ளது. சவுண்ட் சிஸ்டம், ஒயர் இல்லாமலேயே மொபைல் சார்ஜ் செய்யும் வசதி, 11 USB போர்ட்டுகள் என காரின் உட்புற வடிவமைப்பு மற்றும் வசதிகளில் எந்தவிதமான சமரசமும் செய்யப்படாமல் உருவாக்கப்பட்டுள்ளது. ஆடம்பர காருக்கான மிகச்சிறந்த முன்னுதாரணமாக, அனைத்து அதிநவீன வசதிகளுடன் ஜி.எல்.எஸ் கார் உருவாக்கப்பட்டுள்ளது. 2 மற்றும் 3 ஆகிய இரண்டு சீட் வரிசைகளில் எதை வேண்டுமானாலும் எளிதாக மடக்கி வைத்துவிடலாம். தொலைதூர பயணங்களை இனிமையானதாகவும் சொகுசானதாகவும் மாற்ற அந்த வசதியும் செய்யப்பட்டுள்ளது. 9 ஏர் பேக்குகள், ADS+ உடன் AIRMATIC suspension, ஆஃப் ரோட் ஏபிஎஸ் ஆகிய வசதிகளும் இந்த காரில் உள்ளன.

all new mercedes benz gle lwb and gls demonstrates all kinds of strength

யாருடைய உதவியும் இல்லாமல் எளிதாக பார்க் செய்யும் விதமாக 360 டிகிரி கேமரா, 2*31.2செமீ (12.3’’) அகலஸ்க்ரீன் காக்பிட், NTG 6 MBUX, Natural Voice Assist, strategically placed HDD navigation ஆகிய அம்சங்களும் உள்ளன.

உலகளவில் எஸ்யூவி கார்களை விரிவாக்கம் செய்யும் பணியில் மிகத்தீவிரமாக ஈடுபட்டுள்ளது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம். 7,83,000 யூனிட்டுகளுக்கும் மேலாக விற்பனை செய்ததில், எஸ்யூவி தான் 2019ல் அதிகபட்சமாக விற்பனையானது. இந்தியாவிலும் மெர்சிடிஸ் பென்ஸின் எஸ்யூவி கார்களுக்கு இந்தியாவில் பெரிய கிராக்கி இருக்கிறது. இந்திய வாடிக்கையாளர்களுக்காகவே ஜி 350டி, நியூ ஜிஎல்சி, நீண்ட வீல்பேஸ் உடைய ஜி.எல்.இ, நியூ ஜிஎல்சி கூப், ஜி.எல்.எஸ் ஆகிய 5 எஸ்யூவி மாடல்களை இறக்கியுள்ளது மெர்சிடிஸ் பென்ஸ்.

all new mercedes benz gle lwb and gls demonstrates all kinds of strength

இந்தியாவில் ஆடம்பர எஸ்யூவி சொகுசு கார் பிரியர்களின் மனதில் உதிக்கும் முதல் பிராண்ட் மெர்சிடிஸ் பென்ஸ். மெர்சிடிஸ் பென்ஸ் வைத்திருப்பவர்களின் மரியாதையை பறைசாற்றுகிறது. அந்தவகையில், மெர்சிடிஸ் பென்ஸ் GLE LWB மற்றும் GLS கார்கள் அனைத்துவிதமான அதிநவீன வசதிகளையும் கொண்ட சிறந்த கார்கள்.  சாதனையாளர்களுக்கான கார் மெர்சிடிஸ் பென்ஸ். நீங்களும் சாதனையாளர்களில் ஒருவர் என்றால், மெர்சிடிஸ் பென்ஸ் GLE LWB மற்றும் GLS கார்கள் உங்களுக்கானது. #AllKindsOfStrength
 

Follow Us:
Download App:
  • android
  • ios