Asianet News TamilAsianet News Tamil

ஒட்டு மொத்தமா முடங்க போகிறது ... “ ரியல்  எஸ்டேட்  துறை “.....!!! குறைந்த  விலையில்  வீடு  வாங்க வாய்ப்பு .....!!!

all can-get-the-own-house-in-2022
Author
First Published Dec 28, 2016, 11:55 AM IST


ஒட்டு மொத்தமா முடங்க போகிறது ... “ ரியல்  எஸ்டேட்  துறை “.....!!! குறைந்த  விலையில்  வீடு  வாங்க வாய்ப்பு .....!!!

கருப்பு  பண  பதுக்கல் காரர்கள், பினாமி பெயரில்  நிலத்தை வாங்கி   குவித்திருப்பதால், தற்போது  இந்த  துறையில், பிரதமர்  எடுக்கும்  நடவடிக்கை,  ரியல் எஸ்டேட்  துறையை  சரியான  பாதைக்கு   கொண்டு செல்லும்  என  ,  பல  நிபுணர்கள்  கணித்துள்ளனர்.

பினாமி ....?

·         அதிக  எண்ணிகையில்  வீடுகளை  வாங்கி  வைத்திருப்பதும்,

·         தங்கம்  பதுக்கல்,

·         பங்குச்சந்தையில்  முதலீடு,

·         வங்கி சேமிப்பு ....

இது போன்ற   அனைத்து  வகையிலும் , கருப்பு  பண  பதுக்கல்காரர்கள் , பினாமி  பெயரில் பதுக்கி  வைத்துள்ளனர்.

இதை  எல்லாம்  வெளிக்கொணரும்  பொருட்டு  மோடி ,  பல  திட்டங்களை  கொண்டு வருகிறார்.இதன் மூலம்  பினாமி  சொத்துக்கள்  அனைத்தும்  முடக்கப்படும். சொல்லப்போனால், பினாமி பெயரில்  மட்டும் , 100  கோடி  டாலருக்கும்  அதிகமான  சொத்துமதிப்பு இருக்கும்  என  கணிக்கப்பட்டுள்ளது.பினாமி  பெயரில் சொத்துக்கள்  இருப்பதால்,  வரி  ஏய்ப்பு    அதிகளவில்   நடைபெறுகிறது.

இதனால்  மாநில  அரசுக்கு , வருமான  இழப்பு  ஏற்படுகிறது.

சட்டம்  சொல்வது என்ன ?

 ரியல் எஸ்டேட்  துறை சம்பந்தமான  சட்டத்தை ,  1988-ம் ஆண்டு கொண்டு கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த  சட்டம் இதுவரை  அமலுக்கு  வரவில்லை.இந்த சட்டத்தில்,  பினாமி   பெயரில்  சொத்து வாங்கினால்,  கடுமையான  அபராதம் , சிறை  தண்டனையும்  வழங்கும்.  மேலும்,  பினாமி  பெயரில் வாங்கப்பட்ட சொத்து மதிப்பில்,  நான்கில்  ஒரு பங்கு ,  அபராதமாக  விதிக்கப்படும் என  ,  சட்டம்  சொல்கிறது .

1988-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டம் இது வரை அமல்படுத்தப்படவில்லை. பினாமி பெயரில் சொத்து வாங்குவதை தடுப்பதோடு கடுமையான அபராதம், சிறைத் தண்டனை விதிக்கவும் இதில் வகை செய்யப்பட்டுள்ளது. பினாமி பெயரில் வாங்கப்பட்ட சொத்தின் சந்தை மதிப்பில் நான்கில் ஒரு பகுதியை அபராதமாக விதிக்க சட்டம் வகை செய்கிறது. 

இந்த  சட்டம்   தற்போது  அமலுக்கு  வந்தால்,  ஏற்படும்  நன்மைகள்  என்ன ?

பினாமி   சொத்து  தடுப்பு  மசோதா  மூலம்,  அனைத்து  பினாமி  சொத்துக்களை  முடக்க  முடியும்

இதன் மூலம்,  2022 வரும்  ஆண்டுக்குள் ,  அனைவருக்கும்  வீட்டு  வசதி  அளிக்கும்  பொருட்டு,  அரசின்  திட்டத்தை  எட்ட  முடியும்.

மேலும்,  வீடு,  மனை   தொடர்பான  பத்திரங்கள்  தெளிவாக  இருக்கும் பட்சத்தில்,  மிக சுலபமாக ,  கடன் கிடைக்கும்  என்பதால், , புதியதாக  வீடு  வாங்குபவர்களின் எண்ணிக்கையும்  அதிகரிக்கும் .  

தற்போது , இதற்கான  நடவடிக்கையில்  மோடி  இறங்கியுள்ளதால்,  ரியல்   எஸ்டேட்  துறையில் பல  மாற்றங்கள் வரப்போகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios