MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Gas Booking: இனி புக் பண்ண 4 மணிநேரத்துல கேஸ் சிலிண்டர் வீட்டுக்கு வரும்! சூப்பர் அறிவிப்பு!

Gas Booking: இனி புக் பண்ண 4 மணிநேரத்துல கேஸ் சிலிண்டர் வீட்டுக்கு வரும்! சூப்பர் அறிவிப்பு!

Gas Booking: இனி கேஸ் புக் பண்ணா வெறும் 3-4 மணி நேரத்துல வீட்டுக்கு சிலிண்டர் டெலிவரி ஆகிடும். 'இண்டேன் எக்ஸ்ட்ராலைட் நவ்' என்ற இந்த புதிய சேவையைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Aug 11 2026, 09:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இனி 4 மணி நேரத்தில் கேஸ் சிலிண்டர் வீட்டுக்கு வரும்
Image Credit : AI

இனி 4 மணி நேரத்தில் கேஸ் சிலிண்டர் வீட்டுக்கு வரும்

சமையல் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் கடந்த சில மாதங்களாக மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இனி அந்த கவலை இல்லை, இந்தியன் ஆயில் ஒரு நல்ல செய்தியைக் கொண்டு வந்துள்ளது. சமைக்கும்போது திடீரென கேஸ் தீர்ந்துவிட்டால் என்ன செய்வது என்று இனி கவலைப்பட வேண்டாம். வீட்டில் கூடுதலாக சிலிண்டர் இல்லாவிட்டாலும், 3-4 மணி நேரத்தில் புதிய சிலிண்டர் உங்கள் வீடு தேடி வரும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
இந்தியன் ஆயில் 'இண்டேன் எக்ஸ்ட்ராலைட் நவ்' சேவை
Image Credit : ANI

இந்தியன் ஆயில் 'இண்டேன் எக்ஸ்ட்ராலைட் நவ்' சேவை

இந்தியன் ஆயில் 'இண்டேன் எக்ஸ்ட்ராலைட் நவ்' என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், புக் செய்த 3-4 மணி நேரத்தில் 10 கிலோ எடை கொண்ட கம்போசிட் சிலிண்டரை வாடிக்கையாளர்கள் பெறலாம். இது எடை குறைவாக இருப்பதால் கையாள்வதும் எளிது. புதிய சிலிண்டரை எப்படி புக் செய்வது? 'IndianOil One' ஆப், இந்தியன் ஆயில் வாடிக்கையாளர் போர்ட்டல் அல்லது 7588888824 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் எளிதாக புக் செய்யலாம்.

புக் செய்த 3-4 மணி நேரத்தில் சிலிண்டர் டெலிவரி செய்யப்படும். இந்த கம்போசிட் சிலிண்டர்கள் எடை குறைவாக இருப்பதால், தூக்கிச் செல்வது சுலபம். புதிய இணைப்பு பெறவும் அதிக ஆவணங்கள் தேவையில்லை.

34
சிலிண்டர் விநியோக நேரம் என்ன?
Image Credit : X

சிலிண்டர் விநியோக நேரம் என்ன?

இந்த 'இண்டேன் எக்ஸ்ட்ராலைட் நவ்' தட்கல் சேவையானது காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை செய்யப்படும் புக்கிங்குகளுக்கு மட்டுமே பொருந்தும். மாலை 4 மணிக்கு மேல் புக் செய்யப்படும் சிலிண்டர்கள் அடுத்த நாள் காலையில் டெலிவரி செய்யப்படும். மேலும், இந்தச் சேவையைப் பெற வாடிக்கையாளர்கள் வழக்கமான சிலிண்டர் விலையுடன் சேர்த்து சிறிய அளவிலான கூடுதல் தட்கல் சேவைக் கட்டணத்தையும் செலுத்த வேண்டியிருக்கும்.

44
50% எடை குறைவானவை
Image Credit : Gemini AI

50% எடை குறைவானவை

இந்த 10 கிலோ கம்போசிட் சிலிண்டர்கள் துருப்பிடிக்காத, அக்ரிலிக் ஃபைபர் கிளாஸ் பொருட்களால் தயாரிக்கப்பட்டவை என்பதால், வழக்கமான இரும்புச் சிலிண்டர்களை விட 50% எடை குறைவானவை. இதன் வெளிப்படைத்தன்மை கொண்ட பிரத்யேக வடிவமைப்பால் சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மீதமுள்ளது என்பதை வெளியே இருந்தே தெளிவாகப் பார்த்துக் தெரிந்துகொள்ள முடியும்.

மேலும், இது முழுமையான வெடிப்பு எதிர்ப்புத் திறன் கொண்டிருப்பதால் சமையலறையில் அதிக பாதுகாப்பை உறுதி செய்கிறது. தற்போது முதற்கட்டமாக நாட்டின் முக்கிய பெருநகரங்கள் மற்றும் தேர்வு செய்யப்பட்ட குறிப்பிட்ட விநியோக மையங்களில் மட்டுமே இச்சேவை தொடங்கப்பட்டுள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வாயு உருளை
எரிவாயு உருளை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
TN Govt Launches: மூட்டைக்கு காசு கேட்டால் முடிந்தது கதை.! வாட்ஸ்அப்பில் புகார் தட்ட உத்தரவிட்ட தமிழக அரசு!
Recommended image2
Free.! Free! Free: மகளிருக்கு குட் நியூஸ்.! இனி Express, டீலக்ஸ், Mofussil பேருந்துகளிலும் கட்டணம் கிடையாது.! எப்போது முதல் தெரியுமா?
Recommended image3
RBI New FD Rules: FD-ல் பணம் போட்டிருக்கீங்களா? அக்டோபர் முதல் ஆர்பிஐ கொண்டு வரும் புதிய விதிகள் இதோ!
Related Stories
Recommended image1
LPG Subsidy: கேஸ் மானியம் உங்கள் கணக்கில் வரலையா? காரணம் என்ன? எப்படி சரி செய்வது?
Recommended image2
LPG Price Cut: அதிகாலையிலேயே குட்நியூஸ்.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை.. எவ்ளோ தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved