akshaya tritiya 2022 : அட்சய திருதியை நன்நாளில் எந்தச் செயலைச் செய்தாலும், புதிய பொருள் வாங்கினாலும் அது பல்கிப்பெருகும் என்பது நம்பிக்கை. அதனால்தான் மக்கள் செல்வம் சேர வேண்டும் என்பதற்காக தங்கத்தை வாங்குகிறார்கள்.
அட்சய திருதியை நன்நாளில் எந்தச் செயலைச் செய்தாலும், புதிய பொருள் வாங்கினாலும் அது பல்கிப்பெருகும் என்பது நம்பிக்கை. அதனால்தான் மக்கள் செல்வம் சேர வேண்டும் என்பதற்காக தங்கத்தை வாங்குகிறார்கள்.
இந்த நாளில் குண்டுமணித் தங்கம் வாங்கினாலும் அது பல்கிப்பெரும் என்ற நம்பிக்கையால்தான் தங்கம் வாங்க சிறந்தநாளாக அட்சயதிருதியை பார்க்கப்படுகிறது.ஆனால், தங்கத்தை நகைகளாக மட்டும்தான் மக்களில் பெரும்பாலும் வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால், ஆபரணத் தங்கத்தையும் கடந்து 4 வழிகளில் தங்கத்தை வாங்க முடியும் என்பது பலருக்கும் தெரியவில்லை.

ஆபரணத் தங்கத்தைப் போல் இந்த 4 வழிகளில் வாங்கும் தங்கத்தையும் தேவைக்கு தகுந்தார்போல் அடமானம் வைத்து பணம் பெறலாம், அதே மதிப்புதான் கிடைக்கும். ஆனால் ஆபரணத் தங்கத்தைவிட பாதுகாப்பானது, எளிதாக பணமாக மாற்றமுடியும், பணவீக்கத்துக்கு ஏற்றார்போல் மதிப்பு மாறும், நல்ல ரிட்டன் கிடைக்கும்
தங்கப் பத்திரங்கள்(எஸ்ஜிபி)
மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தங்கப்பத்திரங்கள் தங்கத்தின் கிராம் அடிப்படையில் வழங்கப்படுவதாகும். ஆண்டுக்கு 2.5% வட்டி வழங்கப்படுகிறது. இந்த தங்கப்பத்திரம் குறிப்பிட்ட ஆண்டு வைப்புத்தொகைஅடிப்படையில்வட்டி வழங்கப்படுகிறது. அதாவது 8 ஆண்டுகளுக்கு வைப்புத்தொகையில் வைத்தால், 5-வது ஆண்டிலிருந்து நாம் தேவைக்கு ஏற்றார்போல் எடுத்துக்கொள்ள முடியும். இந்த தங்கப்பத்திரத்தில் முதலீடு செய்ய டீமேட் கணக்கு அல்லது இ-சான்று தேவை. இந்த தங்கப்பத்திரத்தின் மூலம் கிடைக்கும் வட்டிக்கு டிடிஎஸ் பிடிக்கப்படாது

கோல்டு இடிஎப்
கோல்டு எக்சேஞ்ச் டிரேடட் பன்ட்(கோல்டு இடிஎப்) தங்கத்தைப் போன்ற மதிப்புதான் என்றாலும் இது மின்னனுவடிவத்தில் இருக்கும். முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்வதுபோல் இதில் முதலீடு செய்து வாங்கலாம் விற்கலாம். ஆனால், இதற்கு முறையாக பங்குதரகர் மூலம் பதிவு செய்து, டீமேட் கணக்கு வைத்திருக்க வேண்டும். இடிஎப் மூலம் முதலீட்டை எப்போது வேண்டுமானாலும் பணமாகப் பெற முடியும். முதலீட்டாளர்கள் இடிஎப்பை தேவைக்கு ஏற்ப விற்பனை செய்து உடனடியாகப் பணம் பெறலாம். இதில் வர்த்தகம் செய்பவர்களுக்கு கட்டணம் ஏதும் இல்லை. ஆனால், இடைத்தரகர் கட்டம், டீமேட் கண்ககு கட்டணம் உள்ளிட்டவை மட்டும் வசூலிக்கப்படும்.

டிஜிட்டல் கோல்டு
தங்கத்தை டிஜிட்டல் வகையில் வைத்திருப்பதாகும். 24 காரட் தங்கத்தையும் நாம் தங்கத்தை நேரடியாக வாங்காமல் அதை சொந்தமாக்க முடியும். இதற்காக யுபிஐ மூலம் ஏராளமான செயலிகள் உள்ளன, வங்கிகளும் இதற்கான வசதிகளை வழங்குகின்றன. டிஜிட்டல் கோல்டு வாங்க பணம் செலுத்தினால், உடனடியாக நம்முடைய வாலட்டில் கோல்டு டெபாசிட் செய்யப்படும். இந்த தங்கத்தை வாங்கும்போது, பாதுகாப்பாகவும், சுத்தமான தங்கம் என்பதற்கான அரசின் சான்றும் வழங்கப்படும். இதற்கு 3% ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும்.

தங்கமாக வாங்குதல்
தங்கத்தை நேரடியாக நகைக் கடைகளுக்குச் சென்று ஆபரணங்களாக, காசுகளாக வாங்குவதாகும். இதற்கு செய்கூலி, சேதாரம், காப்பீடு உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களைச்செலுத்திதான் வாங்க முடியும். இதுதவிர தங்க காசுகள், பார்களாகவும் வாங்கலாம். இதற்கு 4 சதவீதம் கூடுதல் செஸ் வரியும் விதிக்கப்படும்
